‘ராஜபுத்திரன்' - விமர்சனம்
- mediatalks001
- May 31
- 2 min read

1991 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெறும் கதையாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மனைவியை இழந்த இளைய திலகம் பிரபு தன் தாய் , மகள் , மகன் என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
தாயில்லாத மகனான வெற்றி மீது அதிகளவு பாசம் வைத்திருக்கும் பிரபு வாலிப பருவம் அடைந்த வெற்றியை எந்த வேலைக்கும் அனுப்பாமல் பொறுப்புடன் பார்த்து கொள்கிறார் .
கிராமத்தில் மழை சரியாக பெய்யாமல் வறண்ட பூமியாகி விவசாயம் பாதிக்கப்படுவதால் குடும்ப சூழ்நிலையால் பிரபு வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.
இதே நேரத்தில் நாயகி கிருஷ்ண பிரியாவை பார்த்ததும் வெற்றி காதல் கொள்ள,, ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்
பணத்திற்காக கஷ்டப்படும் அப்பா பிரபுவின் நிலைமையை நினைத்து நண்பர்களின் உதவியால் பிரபுவுக்கு தெரியாமல் வேலைக்குச் செல்கிறார் வெற்றி,.
இந்நேரத்தில் அரசாங்கத்தை ஏமாற்றி சட்ட விரோதமாக பண பரி வர்த்தனை செய்யும் வில்லன் கோமல் குமாரிடம் வேலை கேட்கும் வெற்றி,,,,, கோமல் குமாரின் அடியாள் லிவிங்ஸ்டன் தரும் சட்ட விரோத பணமான வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் பணத்தை வரி ஏதும் செலுத்தாமல் முறையற்ற முறையில் நேரடியாக கொண்டு சென்று அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கும் வேலையை செய்கிறார் வெற்றி.
எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்து வரும் வெற்றிக்கு ஒரு நாள் ஒரு குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய பணம் அவரிடம் இருந்து திருடு போய் விடுகிறது.
வெற்றியிடம் இருந்து பணம் திருடு போவதால் வில்லன் கோமல் குமார் பணத்திற்காக வெற்றியை அடிக்க முற்படும்போது அப்பா பிரபு தன் வீட்டின் பத்திரத்தை வைத்து மகனை காப்பாற்றுகிறார் .
முடிவில் நாயகன் வெற்றி திருடு போன பணத்தை எடுத்தது யார் என கண்டுபிடித்தாரா?
நாயகி கிருஷ்ண பிரியாவுடன் காதல் கொண்ட வெற்றியின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைந்ததா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ராஜபுத்திரன்'.
இயல்பான நடிப்பில் கிராமத்து இளைஞராக கதையின் நாயகனான வெற்றி காதல் ,பாசம் ,ஆக்க்ஷன் என அனைத்திலும் தேர்ந்த நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அனுபவ நடிப்பில் அப்பாவாக நடித்திருக்கும் இளைய திலகம் பிரபு உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிகர் திலகமாக நடிப்பில் வாழ்கிறார் .
கதைகேற்றபடி சிறப்பாக நடிக்கும் நாயகி கிருஷ்ணபிரியா
இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், கோமல் குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை ஆகியோர் நடிப்பு சிறப்பு .
இசையமைப்பாளர் நௌஃபல் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் . ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
தந்தைக்கும் , மகனுக்கும் உள்ள பாசத்தை மையமாக கொண்ட கதையுடன் காதல் ,வில்லன் , ஆக்க்ஷன் என ஜனரஞ்சகமாக குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மகா கந்தன்
ரேட்டிங் - 3.5 / 5
Commentaires