வேலூர் மாவட்டத்தில் நல்லூர் கிராமத்தில் நாற்பது வருடங்களாக பிரபலஅரசியல் கட்சியின் தொண்டனாக வாழ்ந்து வரும் ஜார்ஜ் மரியன் தன் மகன் நாயகன் விஜய் குமார் மனைவி நாச்சியார் சுகந்தியுடன் வாழ்ந்து வரும் நிலையில், ஜார்ஜ் மரியன் கட்சியின் கொள்கையை மதித்து தீவிர விசுவாசியாக இருந்தும் கட்சி தலைமை அவரை கடைசி வரை கட்சி தொண்டனாகவே பார்க்கிறது
அரசியல்வாதியாக இருக்கும் திலீபன் சகோதரியும் நாயகன் விஜய்குமாரும் ஒருவரை ஒருவர் காதலிக்க,,, ஒரு கட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் சுயேட்சையாக நிற்கும் திலீபனின் தந்தை ஜார்ஜ் மரியனின் ஆதரவில்லாமல் தேர்தலில் தோற்று விடுகிறார்.
இதனால் ஏற்படும் பிரச்சனையால் விஜய்குமாரின் காதல் முறிந்து அந்த பெண்ணிற்கு வேறு இடத்த்தில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விஜய்குமார் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணான நாயகி ப்ரீத்தி அஸ்ரானியை திருமணம் செய்து கொள்கிறார்.
இந்நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வர, என்றைக்கும் தலைவனின் மகன்தான் தலைவனாக வர வேண்டும் தொண்டனின் மகன் என்றைக்கும் தொண்டன்தான் என ஊரில் அரசியல் பிரமுகரால் அவமானப்படுத்தப்பட ,,,விஜய்குமாரின் தங்கை கணவனான பாவல் நவகிதன் அரசியல் களத்தில் நிற்பதற்கு விஜய்குமாரை ஊக்குவிக்க அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேர்தலில் நிற்கிறார் விஜய்குமார்.
உள்ளாட்சி தேர்தலில் கட்சியை மதிக்கும் ஜார்ஜ் மரியன் விஜய்குமாருக்கு ஆதரவு தராதலால் ஐந்து வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் தோல்வி அடைகிறார் விஜய்குமார்.. இதனால் பல இழப்புகளையும் விரோதிகளையும் சந்திக்கிறார்.
ஒரு கட்டத்தில் மீண்டும் நடைபெறும் தேர்தலில் தனது மனைவி நாயகி ப்ரீத்தி அஸ்ரானியை வேட்பாளராக நிற்க வைக்கிறார் விஜய் குமார்.
இந்நிலையில் மாமனான பாவல் நவகீதன் மர்ம நபர்களால் கொல்ல பட்டு ஆற்றங்கரையில் பிணமாக கிடக்கிறார்.
இக்கட்டான இச் சூழலில் நடைபெறும் தேர்தலில் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி வெற்றி பெற்றாரா?
பாவல் நவகீதனை கொன்ற மர்ம நபர் யார் ? என்ன காரணத்திற்காக அவரை கொன்றார்கள் என்பதை சொல்லும் படம்தான் 'எலக்சன்’
நடராசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் விஜய் குமார் ஆரம்பத்தில் காதல் நாயகனாகவும் , அரசியலில் வேட்பாளராகி தோற்ற பின் அரசியலை பற்றி தெரியாமல் உணர்வுப்பூர்வமான நடிப்பில் கண்கலங்கும் காட்சிகளிலும், ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாகவும் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதைக்கேற்றபடி இயல்பாக நடித்துள்ளார்.
அரசியல் கட்சியில் தொண்டனாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார்
மாமனாக நடிக்கும் பாவல் நவகீதன் , வில்லனாக நடிக்கும் திலீபன் ,ராஜிவ் ஆனந்த் , குலோத்துங்கன் உதயகுமார் என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையும் ,மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
உள்ளாட்சித் தேர்தலை மையமாக கதையுடன் பொதுவான ஒரு அரசியல் கட்சி தலைமையில் தொண்டனை வழி நடத்தும் முறையை அழுத்தமாக சொல்வதுடன் வழக்கமான அரசியல் படமாக இல்லாமல் அரசியல் வியாபாரம் அல்ல ஒரு சமூக நீதிக்கான சேவை என்பதை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் தமிழ்.
இறுதியில் மக்களுக்கான அரசியலை பற்றி பேசும் கதை களம்
ரேட்டிங் - 3.5 / 5
Comments