top of page
mediatalks001

'ஹரா' திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன்,,,அமைச்சராக வனிதா விஜயகுமார் !



'ஹரா' திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன், அமைச்சராக அசத்தும் வனிதா விஜயகுமார்


கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தில் அவருடன் மோதும் எதிர்மறை பாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார்.


மேலும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார். 'ஹரா' திரைப்படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் வனிதா விஜயகுமாரின் கதாபாத்திரங்களும் நடிப்பும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


'ஹரா' திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.


எத்தனையோ இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மோகன், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி 'ஹரா' திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என இயக்குநர் தெரிவித்தார்.


'ஹரா' திரைப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.


பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே 'ஹரா' படத்தின் முக்கிய கருத்தாகும்.


இப்படத்தில் முதல் பார்வை, டைட்டில் டீசர் மற்றும் 'கயா முயா...' என்ற பாடல் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில் உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் வனிதா விஜயகுமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


Comments


bottom of page