பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகாவின் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “இந்தியன் 2”.
ஜூலை மாதம் 12 ஆம் தேதி “இந்தியன் 2”. திரைக்கு வர இருக்கும் நிலையில்
இப்படத்திற்காக படக்குழுவினர் மாநிலங்கள் கடந்து நாடு நாடாக சென்று ப்ரொமோஷன் செய்து வருகின்றனர்.
இப்படத்தில் கமல்ஹாசன், எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், யு.ஏ.இ. நாட்டில், துபாய் நகரி்ன் பாம் சுமைரா கடலுக்கு மேல், ஸ்கை டைவ் என சொல்லப்படும் விமானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கைடைவ் வீரர்கள் இந்தியன் 2 பிரமாண்ட போஸ்டரை, மிகப்பெரும் கொடி போல.. வானில் பறக்க விட்டபடி தரையிறங்கி வரும் சாகச வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
Comments