நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஊர்வசிக்கு மாறன், தினேஷ்,சேகர் நாராயணன்,மெலடி டார்கஸ்,தாட்சாயிணி என இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள்.
திருமணமாகி தனி தனி குடும்பமாக வாழும் ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார்.
குடும்பத்தில் பிள்ளைகளுக்குள் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளால் மன அழுத்த நோயினால் மன சிதைவு ஏற்பட்டு சில சமயங்களில் மற்றவர் வீட்டை பூட்டி விடுவது, யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி பிரச்சினையை கொண்டு வருவது, அடிக்கடி எதாவது வில்லங்கம் செய்வது என இருக்கிறார் ஊர்வசி
திடீர் என ஊர்வசி ஒருநாள் காணாமல் போக அவர் கொல்கத்தாவின் ஹவுரா நகரில் இருப்பதாக அங்கிருக்கும் தமிழ் ராணுவ வீரர் மூலம் பிள்ளைகளுக்கு தகவல் கிடைக்கிறது.
அண்ணன் தம்பி இருவரும் குடும்ப பிரச்சனையால் சில வருடம் பேசாமல் இருக்கும் நிலையில் மூத்த மகன் மாறனும், இளையமகன் தினேஷும் அம்மாவை அழைத்துவர கொல்கத்தா செல்கிறார்கள்.
கொல்கத்தாவில் தமிழ் ராணுவ வீரர் துணையுடன் இவர்கள் இருவரும் போலீஸ் நிலையம் செல்ல அங்கு இன்ஸ்பெக்டர்,,, அம்மாவான ஊர்வசியை காப்பகத்துக்கு அனுப்பி விட்டதாக சொல்கிறார் .
மூவரும் சேர்ந்து ஊர்வசியை அழைத்து வர காப்பகத்துக்கு சென்று பார்க்கும்போது காப்பகத்தை விட்டு ஊர்வசி தப்பி விட்டதாக அங்கு இருக்கும் மேலாளர் தெரிவிக்கிறார் .
முடிவில் காப்பகத்தை விட்டு தப்பி விட்டதாக சொல்லப்படும் ஊர்வசியை அண்ணன் -தம்பியான மாறனும் தினேஷும் கண்டுபிடித்து பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வந்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’J பேபி’
பேபியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி, படம் முழுவதும் தாயின் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
திறந்திருக்கும் வீட்டின் கதவுகளை பூட்டு போடுவதில் தொடங்கி, அடுத்தவர் வீட்டுக்கு வரும் கடிதங்களை காரணம் இன்றி எடுத்து பத்திரப்படுத்தி கண்ணில் பட்ட பணம், பொருளை அள்ளிக்கொண்டு போய் கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய்வது வரை கதாபாத்திரத்தில் ஊர்வசி தெரியவில்லை ரசிகர்களுடன் பேபியம்மா வாழ்கிறார் .
ஊர்வசியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மாறன், இதுவரை காமெடியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் இந்த படத்தின் மூலம் தன்னாலும் சிறப்பான நடிப்பை வழங்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியிருக்கிறார்.
ஊர்வசியின் இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ், அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் விதத்தில் நடித்திருக்கிறார்.
உண்மை சம்பவத்தில் பேபியம்மாவிற்கு கொல்கத்தாவில் உதவி செய்த ராணுவ வீரரான சேகர் நாராயணன், அதே கதாபாத்திரத்தில் படத்திலும் நடித்திருக்கிறார் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.
டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கொல்கத்தாவின் தெருக்களை இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டும்படி இருக்கிறது .
இயக்குனர் சுரேஷ் மாரி தன் பெரியம்மா பேபியின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவத்தை முழுநீள திரைப்படமாக,,, தெளிவான ஒரே நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையுடன் மிக சிறப்பாக கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் பதியும்படி இயல்பான குடும்ப படமாகஅனைவரும் பாராட்டும் விதத்தில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் .
ரேட்டிங் : 3.5 / 5
Comentários