top of page

'வணங்கான்' டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு


வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு


இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’ ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பட வெளியீட்டை நோக்கி போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில் எஸ்.சரவணன் என்பவர் ‘வணங்கான்’ என்கிற டைட்டிலை இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது படத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாண்புமிகு. வேல்முருகன் எஸ்.சரவணன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வணங்கான் என்கிற டைட்டிலை தனகளது படத்திற்கு பயன்படுத்த இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளார். இயக்குநர் பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வாதங்களை முன் வைத்து வாதாடினார்.


பல தடைகளைக் கடந்து ரிலீஸை நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’ படக்குழுவினருக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பு இன்னும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page