top of page

ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’

  • mediatalks001
  • May 25, 2024
  • 1 min read


ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் - ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அறிவியல் புனைகதை காவியமான 'கல்கி 2898 கி.பி' படத்தின், ஐந்தாவது மற்றும் இறுதி ஹீரோவான 'புஜ்ஜி' என்ற பெயரிடப்பட்ட, எதிர்கால வாகனத்தின் அசத்தலான டீஸரைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர்கள், இறுதியாக மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில் நிகழ்வில் 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை - நடிகர் பிரபாஸ் ஒரு வீடியோவாக வெளியிட்டார், அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்த தருணங்களை நினைவு கூர்ந்து, பிரபாஸ் முழு மனதுடன், ‘லவ் யூ, புஜ்ஜி’ என்று பிரம்மாண்டமான நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.



‘புஜ்ஜி’யின் மூளை அதன் உடல் வடிவத்துடன் கூடவே இணைந்த வித்தியாசமான உருவத்தில் உள்ளது, பிரபாஸ் தனது எதிர்கால வாகனத்தில், ‘புஜ்ஜி’யுடன் ஒரு பெரிய சுவரை மோதி உடைத்துக் கொண்டு வந்து, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இக்கண்கவர் வெளியீட்டு விழாவில், அவர் தனது நம்பகமான சிறந்த நண்பனுடன் பயணமாவதைக் காண முடிந்தது. பைரவாவும் புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். பைரவாவிற்கும் புஜ்ஜிக்கும் இடையேயான வலுவான தொடர்பையும் நட்பையும் வெளிப்படுத்தும் அழகான விழாவாக இது அமைந்தது.


இயக்குனர் நாக் அஸ்வின், தயாரிப்பாளர்கள் C. அஸ்வனி தத், ஸ்வப்னா தத் சலசானி மற்றும் பிரியங்கா தத் சலசானி மற்றும் நடிகர் பிரபாஸுடன் இணைந்து தயாரிப்பாளர்கள் ஆகியோருடன், கிட்டத்தட்ட இருபதாயிரம் பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்கள் ஹைதராபாத்தில் கலந்து கொண்டது, மிகப்பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வாக திரையுலகில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியாவின் தனித்துவமான படைப்பான 'கல்கி 2898 கி.பி' படத்தின், விளம்பர பணிகள் இத்தனை பிரம்மாண்டமாக துவங்கியிருப்பது ரசிகர்களிடம் பேசு பொருளாகியுள்ளது. பட ரிலீஸையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில், தயாரிப்பாளர்கள் 'புஜ்ஜி'யின் அற்புதமான வெளியீட்டு விழா மூலம், பட விளம்பர பணிகளை பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளனர்.


அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page