top of page

’படை தலைவன்’ - விமர்சனம்

  • mediatalks001
  • Jun 15
  • 1 min read

Updated: Jun 17


மண்பாண்ட தொழில் செய்து வரும் கஸ்தூரி ராஜாவின் மனைவி வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த குட்டி யானையை தன் பிள்ளையாக நினைத்து வளர்க்கிறார்.


அவரது மறைவுக்கு பிறகு அவர் பாசமாக வளர்த்த யானையை நாயகன் சண்முக பாண்டியன் சகோதரனைப் போல் பார்த்துக் கொள்கிறார்.

இந்நிலையில் வட்டிக்கு கடன் கொடுக்கும் ஒருவரிடம் கடன் வாங்கும் கஸ்தூரிராஜாவுக்கு சரியான வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் அவமானப்படுத்தப்படுகிறார்.


இதனையடுத்து சண்முக பாண்டியன் பணத் தேவைக்காக யானையை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து செல்கிறார்.


அங்கு வில்லனின் சதியால் யானைக்கு மதம் பிடிக்க பொது மக்களை தாக்கி விடுகிறது.இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி யானை முகாமிற்கு அனுப்பப்படுகிறது.


மறுநாள் முகாமிற்கு யானையை பார்க்க சண்முக பாண்டியன் செல்ல அங்கு யானை காணாமல் போகிறது. இதே வேளையில் சண்முக பாண்டியனை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.


முடிவில் நாயகன் சண்முக பாண்டியன் காணாமல் போன யானையை கண்டுபிடித்தாரா?


சண்முக பாண்டியனை கொலை செய்ய நினைக்கும் கும்பல் யார்? என்பதை சொல்லும் படம்தான் ’படை தலைவன்’



நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


சண்முக பாண்டியனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜா, பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கும் யாமினி சந்தர், வில்லனாக நடித்திருக்கும் கருடன் ராம், ரிஷி, முனிஷ்காந்த், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், என்.பி.கே.எஸ்.லோகு, ஏ.வெங்கடேஷ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.



இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.


பாசமாக தன்னுடன் வளர்ந்த யானையை காப்பாற்ற போராடும் நாயனை மைய கருவாக வைத்து அழுத்தமான திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் யு.அன்பு


ரேட்டிங் : 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page