’டி என் ஏ’ - விமர்சனம்
- mediatalks001
- Jun 21
- 1 min read

காதலில் தோல்வியடைந்த நாயகன் அதர்வா போதைக்கு உள்ளாகி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்
ஒரு கட்டத்தில் இவரால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் அதர்வாவை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார்கள்.
இதனிடையே சற்றே மனநிலை பிரச்னை உடைய நாயகி நிமிஷா சஜயனுக்கு சரியாக திருமண வரன் அமையாமல் இருக்கிறது.
மற்றொரு பக்கம் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து குணமாகி வீடு திரும்புகிறார் அதர்வா
இந்நிலையில் அதர்வா – நிமிஷா சஜயனுக்கு இரு குடும்பத்தார்கள் சேர்ந்து திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது.
சில மாதங்களுக்குப் பிறகு கர்ப்பம் அடையும் நிமிஷா சஜயனுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தையை நிமிஷா சஜயனிடம் மருத்துவர் ஒப்படைக்க இது தன்னுடைய குழந்தை இல்லை என கூறி நிமிஷா சஜயன் சத்தம் போடுகிறார்.
ஒரு கட்டத்தில் குழந்தை மாற்றப்பட்டிருப்பது அதர்வாவுக்கு தெரிய வருகிறது.
முடிவில் அதர்வா தன் குழந்தையை கண்டுபிடித்தாரா ? குழந்தை நிமிஷா சஜயனின் குழந்தை கடத்தியது யார்?
குழந்தையை கடத்தியதற்கு என்ன காரணம் என்பதை சொல்லும் படம்தான் ’டி என் ஏ’
நாயகனாக நடித்திருக்கும் அதர்வா இயல்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். மது போதைக்கு அடிமையானவராகவும், மனைவி மீது வைத்திருக்கும் பாசம் , குழந்தையை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சி, அதிரடி ஆக் க்ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெறுகிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் நிமிஷா எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்யக் கூடியவர் இதிலும் மனநிலை பிரச்சனை உடையவராக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நண்பராக வரும் ரமேஷ் திலக், போலீசாக வரும் பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், மருத்துவராக வரும் ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.
பார்த்திபனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
நரபலி , குழந்தை கடத்தல் ஆகியவற்றை மையமாக கொண்ட கதையுடன் ஆக் க்ஷன் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த படமாக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்
ரேட்டிங் - 3 / 5
Comments