’மார்கன்’ - விமர்சனம்
- mediatalks001
- Jun 28
- 1 min read

குப்பை தொட்டியில் இளம்பெண் ஒருவர் உடல்முழுவதும் கருமை நிறமாக மாறி, பிணமாக கண்டெடுக்கப்படுகிறார்.
மர்ம நபர் ஒருவர் ரசாயனத்தை உடலில் செலுத்தி இளம்பெண்ணை கொலை செய்து உடலை குப்பை தொட்டியில் வீசுகிறார்.
இந்நிலையில் இளம் பெண்ணை கொலை செய்த மர்ம நபரை பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மும்பையில் வசிக்கும் போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனி செய்திதாளில் இந்த கொலை சம்பவத்தை படித்தவுடன் . விஜய் ஆண்டனியின் மகளும் இதே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து போனதால் அந்த வழக்கை தான் விசாரிக்க போலீஸ் தரப்பில் முறையிடுகிறார், விஜய் ஆண்டனி.
சென்னை போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனி, தனிப்பட்ட முறையில் வழக்கை விசாரிக்க விஜய் ஆண்டனியிடம் கேட்டுக் கொள்கிறார்.
போலிசாரும் அவருக்கு சில உதவிகளை செய்துக் கொடுப்பதால் அதன் பின் விசாரணையை தொடங்கும் விஜய் ஆண்டனி, தனக்கு கிடைக்கும் தடயங்கள் மூலம் அஜய் தீசனை தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
அஜய் தீஷனிடம் ஒரு அபூர்வ திறமை இருப்பதால் அவரது விசித்திரமான செயல்கள் பல சந்தேகங்களை எழுப்ப, மறுபக்கம் ஏற்கனவே நடந்ததைப்போல அதே பாணியில் மற்றொரு பெண் கொலை செய்யப்படுகிறார்.
முடிவில் கைது செய்யப்பட்ட அஜய் தீஷனின் அபூர்வ திறமையை வைத்து அந்த மர்ம கொலையாளியை விஜய் ஆண்டனி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’மார்கன்’
சிறப்பான நடிப்பில் கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி விசாரணை அதிகாரியாக ரசாயனத்தால் உடலில் ஏற்பட்ட பாதிப்போடு, அவர் மேற்கொள்ளும் விசாரணையும், அவரது உடல் மொழியில் மிக திறமையாக கதாபாத்திரத்தை கையாண்டு நடிப்பில் அனைவரது பாராட்டை பெறுகிறார் .
அறிமுக நடிகர் அஜய் தீசன் அனைத்து திறமைகளையும் நன்கு கற்று தேர்ந்தவர் என்பதை நிரூபிப்பதற்காகவே அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது போல நடிப்பு, ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்திலும் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .
சமுத்திரக்கனி, பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர்
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு பயணிக்க வைக்கும் அளவுக்கு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
தரமான ஒளிப்பதிவில் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு.
எழுதி இயக்கியிருக்கும் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் அழுத்தமான விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் படத்தின் முதல் பாதியிலேயே குற்றவாளியை பார்வையாளர்கள் முடிவு செய்துகொள்ளும் அளவில் காட்சிகளை அமைத்து அவர் தான் குற்றவாளி என்பதை விஜய் ஆண்டனி எப்படி நிரூபிக்கப் போகிறார்? என்ற கேள்வியுடன் ஒரு எதிர்பார்போடு படத்தை ரசிக்கும்படி உருவாக்கியுள்ளார் .
ரேட்டிங் - 3.5 / 5
Comments