'பீனிக்ஸ்’ - விமர்சனம்
- mediatalks001
- 16 hours ago
- 1 min read

தன் அண்ணனை கொலை செய்த எம் எல் ஏ-வான சம்பத் ராஜை பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் வெட்டி கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் நாயகன் சூர்யா சேதுபதி.
சூர்யா சேதுபதியை கைது செய்யும் போலீசார் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கிறது.
கணவரை கொலை செய்த சூர்யாசேதுபதியை கொலை செய்ய துடிக்கும் எம்.எல்.ஏ-வின் மனைவி வரலட்சுமி சரத்குமார், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைத்து அவரை தீர்த்து கட்ட திட்டமிட, அவரது ஆட்களை அடித்து பந்தாடுகிறார் சூர்யா சேதுபதி.
சூர்யா சேதுபதியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து அதிர்ச்சியாகும் வரலட்சுமி சரத்குமாரின் அடியாட்கள் அவரை கொலை செய்ய தொடர்ந்து கொன்று பழி தீர்க்க துடிக்கின்றனர்.
முடிவில் சூர்யா சேதுபதி வரலட்சுமி சரத்குமாரின் கொலை திட்டத்தை முறியடித்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘பீனிக்ஸ்’.
நாயகனாக நடித்திருக்கும் சூர்யா சேதுபதி, அறிமுக நாயகனாக முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக கதாபாத்திரத்துடன் இணைந்து படம் முழுவதும் உடல் மொழியில் அதிரடி நாயகனாக ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களின் மத்தியில் கை தட்டலை பெறுகிறார் .
வில்லனாக நடித்திருக்கும் சம்பத் ராஜ், எம்.எல்.ஏ மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், நாயகனின் அம்மாவாக தேவதர்ஷினி, நாயகனின் அண்ணனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என நடித்தவர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையும் படத்திற்கு பக்க பலம் .
பழிக்கு பழி வாங்கும் கதையை மையமாக வைத்து ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் அனல் பறக்கும் அதிரடி ஆக்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு
ரேட்டிங் - 3.5 / 5
Comments