’3 பி.ஹெச்.கே’ - விமர்சனம்
- mediatalks001
- 6 hours ago
- 1 min read

தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து மனைவி தேவயானி மகன் சித்தார்த் மகள் மீதா ரகுநாத் என குறைவான வருமானத்தோடு வாழ்ந்து வரும் சரத்குமார், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் தன்னைப் போல் தனது மகன் சித்தார்த் வாழ்க்கை இருக்க கூடாது என்பதற்காக தனது சக்திக்கு மீறி மகனின் படிப்புக்கு செலவு செய்கிறார்.
சொந்த வீடு வாங்கும் அவரது முயற்சி பல சிக்கல்களால் தொடர்ந்து தோல்வியில் முடிந்தாலும், தனது மகன் வெற்றி பெற்று தன் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
சரத்குமாரின் மகன் சித்தார்த், அவர் எதிர்பார்த்தபடி படிப்பும் வேலையும் கை கொடுக்காததால் தந்தையின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் திண்டாடுகிறார் .
சரத்குமாரின் சொந்த வீடு கனவு, மகனின் கனவாக மாறினாலும் தந்தையின் கனவான சொந்த வீடு கனவை மகன் சித்தார்த் நிறைவேற்றினாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’3 பி.ஹெச்.கே’.
வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார், அழுத்தமான கதாபாத்திரத்தில் அனுபவ நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார்
சரத்குமாரின் மகனாக நடித்திருக்கும் சித்தார்த் நடிப்பில் பல பரிமாணங்களில் நடுத்தர குடும்பத்தில் வாழும் இளைஞராக இயல்பான நடிப்பில் பாராட்டும்படி நடிக்கிறார் .
சரத்குமாரின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி, சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் மீதா ரகுநாத், சித்தார்த்தின் தோழியாக நடித்திருக்கும் சைத்ரா , யோகி பாபு என நடித்தவர்கள் அனைவரும் திரைக்கதைக்கு பக்க பலம் .
அம்ரித் ராம்நாத் இசையும் , ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை கதையாக கொண்டு, நடுத்தர குடும்பத்தினர் பொருளாதாரத்தில் நடுத்தர குடும்பத்தினர் படும் கஷ்டங்களை அழுத்தமாக திரைக்கதையில் சொலவதுடன் அனைவரும் ரசிக்கும் குடும்ப படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்
ரேட்டிங் - 3 .5 / 5
Comments