top of page

‘பறந்து போ’ - விமர்சனம்

  • mediatalks001
  • 6 hours ago
  • 1 min read

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மிர்ச்சி சிவா கிறிஸ்துவ மதத்தை சார்ந்த மனைவி கிரேஸ் ஆண்டனி பள்ளியில் படிக்கும் மகன் மிதுன் ரியானுடன் வாழ்ந்து வரும் நிலையில், மிர்ச்சி சிவா கடை வைப்பதற்கான முயற்சி செய்யும் நேரத்தில்  கிரேஸ் ஆண்டனி துணிக்கடை நடத்தி வருகிறார் .


மகன் மிதுன் ரியான் பின்னாளில் சிறப்பாக வருவதற்கு இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றபடி உயர்தர கல்வி ,அதற்கான பள்ளி ,அவன் கேட்கும் விளையாட்டு முதல் விலையுயர்ந்த ஆடைகள் காலணி வரை தங்கள் வருமானத்துக்கு மீறி அளவுக்கு அதிகமாக செலவை இருவரும் செய்கின்றனர்


பல நேரங்களில்  அவனை சரியாக கவனிக்காமல் கேட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்வதும் அவ்வபோது மொபைலில் தொடர்பு கொள்வதும் இருவரது வேலையாக இருக்கிறது.


இந்நிலையில் மிதுன் ரியான் சேட்டை செய்வதில் படு கில்லாடியாக இருக்கிறான் . 


ஒரு கட்டத்தில் துணிக்கடை விஷயமாக கோயம்புத்தூர் சென்றிருக்கும் கிரேஸ் ஆண்டனி அவனை வண்டியில் ஊரை சுற்றி பார்க்க அழைத்து செல்லும்படி மிர்ச்சி சிவாவிடம் சொல்ல, அவரும் தன் மகனை வண்டியில் அழைத்து செல்லும்போது மிதுன் ரியான் வழியில் சந்திக்கும் மனிதர்களையும் அவனிடம் மனம் விட்டு பேசும் நண்பர்களையும் அவன் உணரும் இயற்கையான சுழலையும் கண்டு நாம் அனைவரும் இங்கேயே வாழ்ந்து விடலாம் என அடம் பிடிக்க இறுதியில் பெற்றோர்களான மிர்ச்சி சிவாவும் ,கிரேஸ் ஆண்டனிவும் அவனுக்காக என்ன முடிவு எடுத்தார்கள்? என்பதை சொல்லும் படம்தான் ‘பறந்து போ’ 


கோகுல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிர்ச்சி சிவா வழக்கம்போல காமெடி கலந்த வசனங்களுடன் அடம் பிடிக்கும் மகனுக்கு தந்தையாக இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .

குறும்புத்தனத்தால் ரசிக்க வைக்கும் நடிப்பில் சிவாவின் மகனாக நடித்திருக்கும் மிதுன் ரியான், கதைகேற்றபடி நடித்துள்ள சிவாவின் மனைவியாக கிரேஸ் ஆண்டனி,  சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜஸ்வினி என நடித்தவர்கள்திரைக்கதைக்கு பக்க பலம்


ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவும்,  இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையும் , யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும்  படத்திற்கு பக்க பலம் .

 

படிக்கும் இன்றைய தலைமுறையின் நிர்பந்திக்கும் பிரச்சனைகளுடன் அவர்கள் எதிர்பார்க்கும் இயற்கை வாழ்வியலை படம் பார்க்கும் ரசிகர்களும் எதிர்பார்க்கும்படி பயணிக்க வைத்து இயற்கை எழில் சூழ்ந்த அழகான காவியமாக படத்தை இயக்கியுள்ளார்  இயக்குநர் ராம்,


ரேட்டிங் - 4 / 5


Comments


©2020 by MediaTalks. 

bottom of page