’சரண்டர்’ - விமர்சனம்
- mediatalks001
- Aug 3
- 1 min read

சென்னையில் தேர்தல் சமயத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி செய்தி வர நடிகர் மன்சூர் அலிகான் தனது துப்பாக்கியை திருமழிசை காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கும் லாலிடம் ஒப்படைக்கிறார்.
இந்நிலையில் நாயகன் தர்சன் இதே காவல் நிலையத்திற்கு ட்ரைனிங் எஸ் ஐ யாக வருகிறார் நாயகன் தர்சன்
மறுபக்கம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிப் பணத்தை பட்டுவாடா செய்ய 10 கோடியை ஒருவரிடம் கொடுத்தனுப்பகிறார் பிரபல ரெளடியான சுஜித். செல்லும் வழியில் பணம் கொண்டு சென்ற நபர் கார் விபத்தில் சிக்க, பணம் தொலைந்து விடுகிறது. பணத்தைத் தேடி அலைகின்றனர் சுஜீத்
இந்நேரத்தில் சுஜித்தின் தம்பியாக வரும் கெளஷிக் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வர அதை தட்டி கேட்டுக்கிறார் போலீஸ் லால்.
குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த கெளஷிக்கை லால் கேட்டதால் சுஜித்தின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார் லால்.
இதே வேளையில் காவல் நிலைய லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் துப்பாக்கி காணாமல் போகிறது. இதனையடுத்து நாயகன் தர்ஷன் காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
முடிவில் நாயகன் தர்ஷன் காணாமல் போன நடிகர் மன்சூர் அலிகானின் துப்பாக்கியை கண்டுபிடித்தாரா ? வில்லன் சுஜித்திடம் இருந்து ரைட்டர் லாலை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’சரண்டர்’
நாயகனான நடித்திருக்கும் தர்ஷன் கம்பீரமான போலீசாக கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் போலீசாக வரும் லால்
நாயகியாக வரும் பாடினி குமார் ,மன்சூர் அலிகான் , இன்ஸ்பெக்டராக வரும் அருள் டி சங்கர், வில்லனாக மிரட்டியிருக்கும் சுஜித், கௌசிக் , முனீஷ்காந்த், ரம்யா ராமகிருஷ்ணன்,மன்சூர் அலிகான் என படத்தின் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் விகாஷ் படிசா பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
மெய்யேந்திரன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
காவல்துறையில் பணிபுரியும் மேலதிகாரிகளுக்குள் இருக்கும் ஈகோ மற்றும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் , அரசியல் செல்வாக்குமிக்க ஒரு தாதாவின் கொலை வெறித்தனம் என விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஒரு முழு நீள சஸ்பென்ஸ் படமாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கௌதம் கணபதி
ரேட்டிங் - 4 / 5
Comments