’கூலி’ - விமர்சனம்
- mediatalks001
- 11 hours ago
- 1 min read

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர்கான், ஸ்ருதி ஹாசன், சவுபின் சாஹிர், கண்ணன் ரவி, மோனிகா ரெபகா ஜான், திலீபன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கூலி’
சென்னையில் தேவா என்ற பெயரில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வரும் ரஜினிகாந்த் 30 ஆண்டுகளாக தன்னுடைய பழைய வாழ்க்கையை மறந்து வாழ்ந்து வருகிறார்.
மறுபக்கம் தொழிலதிபரான நாகார்ஜுனா விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சட்ட விரோதமான வேலைகளை செய்து வருகிறார்.
நாகர்ஜுனாவிற்கு வலது கரமாக சவுபின் சாஹிர் இருக்கிறார். இவர் போலீசுக்கு தகவல் கொடுப்பவர்களை எல்லாம் கொன்று அந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார்.
நாகர்ஜுனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரஜினிகாந்தின் நண்பராக இருக்கும் சத்யராஜ் தான் கண்டுபிடித்திருக்கும் கருவி மூலம் பிணங்களை சாம்பலாக்கும் வேலையை பார்த்து வருகிறார்.
இதற்கிடையே திடிரென்று மரணமடையும் சத்யராஜின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த விசகபட்டினத்திற்க்கு வரும் ரஜினிகாந்த், அவரது சாவில் மர்மம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் எதிரிகளால் ஆபத்து இருப்பதை அறிவும் ரஜினி ஸ்ருதியை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார்.
இறுதியில் சத்யராஜை கொலை செய்த மர்ம நபர் யார்? கொலை செய்தவர்களை ரஜினிகாந்த் பழி வாங்கினாரா?
ரஜினிகாந்த் – ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே உள்ள உறவு என்ன ? என்பதே ’கூலி’ படத்தின் மீதிக்கதை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாஸாக ஸ்டைலாக நடித்திருக்கிறார். இளமைக்கால ரஜினிகாந்த வரும் காட்சிகள் மட்டும் மனதில் நிற்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா கதாபாத்திரம் எடுபடவில்லை . மலையாள நடிகர் சவுபின் சாஹிர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் . ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருக்கும் சத்யராஜ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
சத்யராஜ் மகள்களாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளஷி மற்றும் கண்ணன் ரவி, காளி வெங்கட், சார்லி, அய்யப்பன் பி.சர்மா என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அமீர் கான், உபேந்திரா மற்றும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் பூஜா ஹெக்டே..
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.
நண்பனின் மறைவுக்கு காரணமாவரை தேடி வரும் நாயகனை மையமான கதையுடன் படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக கொண்டு சென்றவர் இரண்டாம் பாதியை சரியாக கொடுக்க தவற விட்டுவிட்டார், ரஜினி மாதிரி ஒரு மாஸ் ஹீரோவை வைத்து கொண்டு மசாலா படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
ரேட்டிங் : 2. 5 / 5
Comments