’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’ - விமர்சனம்
- mediatalks001
- Sep 1
- 1 min read

அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். பேக்கரி ஒன்றில் பணியாற்றும் அவர் தங்கியிருக்கும அடிக்குமாடி குடியிருப்புக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசிக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் அவரால் ஈர்க்கப்படுகிறார்கள். அதே சமயம், மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது.
அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன், கல்யாணி பிரியர்தர்ஷன் மோத வேண்டிய சுழ்நிலை ஏற்படுகிறது.
உயிர் பிழைத்து ஓடும் சாண்டிக்கு அதீத சக்தி கிடைத்த கல்யாணி பிரியதர்ஷனை பழிவாங்க நினைக்கிறார்.
முடிவில் சாண்டியிடம் இருந்து கல்யாணி பிரியர்தர்ஷன் உயிர் பிழைத்தாரா? இல்லையா ?
அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு உதவி செய்தது யார்? எதற்காக ? என்பதை சொல்லும் படம்தான் ’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’
சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் கொண்ட பெண்ணாக நடித்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் எதார்த்த நடிப்பின் முலம் ரசிகர்களை கவர்கிறார். சூப்பர் உமனாக சண்டை காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.
சந்திராவின் நண்பர்களாக நடித்திருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் கதாபாத்திரம் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.
நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நடன இயக்குநர் சாண்டி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு அழகாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது.
அதீத சக்தி படைத்த பெண்ணை மையக்கருவாக வைத்து ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரும் பிடிக்கும் வகையில் அழகாக காட்சிகளை கையாண்டு ஒரு முழுநீள ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் டோமினிக் அருண்
மதிப்பீடு : 3.5 / 5
Comments