top of page

‘யோலோ’ - விமர்சனம்

  • mediatalks001
  • 19 hours ago
  • 1 min read

ree

நாயகன் தேவ் தன் குழுவுடன் ‘யோலோ’ என்ற ஒரு யூடியூப் சேனல் முலம் பொதுமக்களை பயமுறுத்தும் ப்ராங்க் வீடியோ செய்து அதை யூ டியூப்பில் ஒளிபரப்பி செய்து வருகிறார்.

இந்நிலையில் படவா கோபி மகளான நாயகி தேவிகாவை பெண்பார்க்க விஜே நிக்கி அக்கா மற்றும் மாமாவை அழைத்து செல்கிறார்.


பெண் பார்க்கும் நேரத்தில் தேவிகாவை பார்த்து உனக்குத்தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே விஜே நிக்கியின் அக்கா கூற தேவிகா உட்பட அனைவருக்குமே அதிர்ச்சி அடைகிறார்கள்.

இக்கட்டான சுழலில் தேவிகா நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று கூற, உனது கணவர் தேவ் என்றும், உங்களை இருவரையும் பெங்களூரில் ஒன்றாக பார்த்ததாக சொல்கிறார் நிக்கியின் அக்கா


ஒரு கட்டத்தில் தேவிகாவுக்கும் தேவுக்கும் திருமணம் ஆனதற்கான பதிவு ஆதாரம் இருப்பது தெரிகிறது.


தனக்கு தெரியாமல் நடந்த திருமணத்தின் தேவிகா உண்மையை அறிய தேவிகா முயற்சி செய்கிறார்.


இறுதியில் நாயகன் தேவ், நாயகி தேவிகா இருவருக்கும் நடந்த திருமணம் உண்மையா ?


என்ன காரணத்தினால் இவர்களுக்கு திருமணம் நடந்தது ? என்பதே ‘யோலோ’ படத்தின் மீதிக்கதை.


இயல்பான நடிப்பில் அறிமுக நாயகனாக நடித்திருக்கும் தேவ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், காமெடி , நடனம் , ஆக்ஷன் என அனைத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகனாக வரும் கதிர் ஜோடி நடிப்பு ரசிக்க முடிகிறது.


கதாநாயகி வரும் தேவிகா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி அப்பாவாக வரும் படவா கோபி நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக தெரிகிறது.

விஜே நிக்கி ,ஆகாஷ் பிரேம்குமார், கிரி துவாரகிஷ், படவா கோபி, யுவராஜ் கணேசன், ஸ்வாதி நாயர், பூஜா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சகிஷ்னா சேவியன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சூராஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக பயணிக்கிறது.


விஜே நிக்கி ஆரம்பம் முதல் இறுதிவரை படம் பார்ப்பவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறார் . எது வருமோ அதை மட்டும் செய்தால் நல்ல இருக்கும் விஜே நிக்கி


இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.


கதையை யாரும் யூகிக்க முடியாதபடி பேய் படமா,காதல் படமா , சஸ்பென்ஸ் படமா என குழப்பமான திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் .சாம்



ரேட்டிங் : 2 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page