‘காந்தாரா – அத்தியாயம் 1’ - விமர்சனம்
- mediatalks001
- Oct 3
- 1 min read

காந்தாரா பகுதியில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டத்தில் இருக்கும் இயற்கை மூலிகை பொருட்களை அடைய நினைக்கும் கொடூர குணம் கொண்ட பாங்கரா அரசன் காந்தாராவிற்கு செல்ல வழியில் அந்த பகுதியை காப்பாற்றும் காவல் தெய்வம் அரசனையும் அவருடைய படை வீரர்களை அழித்துவிடுகிறது.
காவல் தெய்வத்தின் அழிவில் இருந்து உயிர் தப்பிக்கும் இளவரசர் ஜெயராம் இனி காந்தாரா பக்கமே போக கூடாது என்று முடிவெடுகிறார்.
ஜெயராமிற்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.
இந்நிலையில் காந்தாரா பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு ஒன்றில் புலியின் பாதுகாப்பில் ஒரு குழந்தை கிடைக்கிறது, அந்த குழந்தைதான் நாயகன் ரிஷப் ஷெட்டி.
இதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு ஜெயராம் தனது மகன் குல்ஷன் தேவய்யாவிற்கு மன்னர் முடி சூடுகிறார். குல்ஷன் முடி சூடிய உடனே வேட்டையாடுவதற்காக காந்தாரா காட்டுக்குச் செல்ல அங்கு வசித்து வரும் ரிஷப் ஷெட்டி இவர்களை விரட்டி அடிக்கிறார்.
காந்தாரா மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசர் ஜெயராம் அவர்களுடன் சமரசமாக பேசி காந்தாராவை கைப்பற்ற சதி திட்டம் போடுகிறார்.
முடிவில் காந்தாராவை கைப்பற்ற அரசர் ஜெயராம் போட்ட சதி திட்டம் நிறைவேறியதா ?
நாயகன் நாயகன் ரிஷப் ஷெட்டி காந்தாராவையும், அங்குள்ள மக்களையும் காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘காந்தாரா – அத்தியாயம் 1’
பழங்குடியினர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் ரிஷப் ஷெட்டி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி உடல் மொழி மற்றும் கண்களில் காட்டும் கோபம் ஆகியவற்றை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரள வைக்கிறார்.
இளவரசியாக வரும் ருக்மணி வசந்த் அழகு தேவதையாக ஆரம்பத்தில் அமைதியாக வருபவர் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அரசராக நடித்திருக்கும் ஜெயராம் மற்றும் அவரது மகனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா என மற்ற கதாபத்திரத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
அரவிந்த் கே.காஷ்யப் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
மூலிகைகள், விலையுர்ந்த விளைபொருட்கள் நிறைந்த காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற நினைக்கும் அரசனுக்கும் காப்பாற்ற நினைக்கும் நாயகனை மைய கருவாக வைத்து ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்புடன் ஒரு முழுநீள ஆக்க்ஷன் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி
ரேட்டிங் : 3.5 / 5








Comments