‘வேடுவன்’ இணையத் தொடர் விமர்சனம்
- mediatalks001
- Oct 11
- 1 min read

பிரபல நடிகரான கண்ணா ரவி தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க கூடியவர்.
இந்நிலையில் கண்ணா ரவி நடித்த படம் தோல்வியை தழுவுகிறது. இந்த தோல்விக்கு காரணம் கண்ணா ரவி கதைக்குள் அதிக தலையீடு இருப்பதே காரணம் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறார்கள் இதற்கிடையே உண்மை சம்பவம் ஒன்றை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ஒருவர் அவரிடம் கதை சொல்கிறார்.
இயக்குநர் சொல்லும் கதைப்படி, கண்ணா ரவி ரகசிய போலீஸாக பயணித்து முன்னாள் ரவுடி ஒருவரை என்கவுண்டர் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் கண்ணா ரவி ஈடுபடும் போது, அவர் என்கவுண்டர் செய்ய உள்ள சஞ்சீவ், தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பது தெரிய வருகிறது. அதே சமயம், சஞ்சீவ் ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தாலும், தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக வலம் வருவதையும் கண்ணா ரவி அறிந்துக் கொள்கிறார்.
முடிவில் தனது மேலதிகாரி தனக்கு அளித்த பணியை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கும் கண்ணா ரவி, திட்டமிட்டபடி சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா ?
சினிமா கதையாக இருந்தாலும், இந்த சம்பவம் கண்ணா ரவியை எந்த வகையில் பாதித்தது ? என்பதை அடுத்தடுத்த எப்பிசோட்கள் மூலம் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே ‘வேடுவன்’.
நடிகர் என்பதால் பலவித வேடங்கள் போட கூடிய வாய்ப்பு இந்த தொடரில் கண்ணா ரவிக்கு கிடைத்திருக்கிறது. போலீஸ், பிச்சைக்காரர், சமையல்காரர் உள்ளிட்ட அனைத்து கெட்டப்புகளிலும் கச்சிதமாக தன்னை பொறுத்திக்கொள்ளும் கண்ணா ரவி சிறப்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ஆதிநாதன் என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் சஞ்சீவ், தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா என பெண் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து கவர்கிறார்கள்.
ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னணி இசை தொடருக்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
புதுமையான ஆக்ஷன் சஸ்பென்ஸ் கலந்த கதையுடன் வித்தியாசமான திரில்லரான தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் பவன் குமார் .
ரேட்டிங் - 3 . 5 / 5








Comments