top of page

‘டீசல்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 3 days ago
  • 2 min read

ree

1979-ஆம் ஆண்டில் வடசென்னை கடலோரப்பகுதிகளில் ராட்சத குழாய் மூலம்  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் என்கிற  குருடாயிலை கொண்டு செல்லும் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வருதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.

இந்நேரத்தில் எதிர்க்கும் மக்களை போலீசார் துப்பாக்கியால் சுடுவதால் 

சாய்குமாரின் நண்பர்கள் இருவர் உயிரை விடுகிறார்கள்.


இந்நிலையில்  காளி வெங்கட்டின் திறமையால் சாய்குமார் ராட்சத குழாய் மூலம்  வரும் குருடாயிலை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மீனவ மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார். 


2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண் இந்த தொழிலை பார்த்து கொள்கிறார்.


ஒரு பிரச்சனையால் வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே ஏற்படும் மோதலால்  வினய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட , ஹரிஷ் கல்யாண் தலைமறைவாக இருக்கிறார். 


சிகிச்சைக்கு பிறகு வரும்  போலீஸ் உயரதிகாரியான வினய் சாய்குமாரை கைது செய்து சிறையில் அடைகிறார்.     


இதை  தனக்கு  சாதகமாக பயன்படுத்திக் கொண்ட  விவேக் பிரசன்னா ராட்சத குழாயில் இருந்து குருடாயிலை திருடி மறைத்து வைத்து விடுகிறார்,


ஒரு கட்டத்தில் குருடாயிலை திருடி விற்கும்  கும்பலை வளர்த்துவிடும் பெரும் புள்ளிகளின் சதிதிட்டத்தால் கடலோர மக்களுக்கு பேராபத்து ஏற்படும் நிலை உருவாகிறது.


இதனை தெரிந்து கொள்ளும் ஹரிஷ் கல்யாண் இறுதியில் காணாமல் போன குருடாயிலை கண்டுபிடித்தாரா?


கடலோர மக்களுக்கு பேராபத்து ஏற்படும் பெரும் புள்ளிகளின் சதிதிட்டம் நிறைவேறியதா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘டீசல்’ .


மீனவராக நடிக்கும் நாயகன் ஹரிஷ் கல்யாண்  அசத்தலான நடிப்பில் அதிரடி நாயகனாக உடல் மொழியில் காதல், நடனம்,எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் 


நாயகியாக வக்கீலாக நடித்திருக்கும் அதுல்யா ரவி இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .


வளர்ப்பு தந்தையாக  நடித்திருக்கும் சாய்குமார் தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்கிறார். 



போலீஸ் உயர் அதிகாரியாக வரும் வினய், போஸ் வெங்கட், அனன்யா, ரமேஷ் திலக், கருணாஸ், சச்சின் கடேகர், ஷாகீர் உசேன் மாறன், தங்கதுரை , கேபிஒய் தீனா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள். 


இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். 


ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரது ஒளிப்பதிவு  வட சென்னை மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளை காட்சிப்படுத்திய விதம் மற்றும் கடல் சார்ந்த காட்சிகளை படமாக்கிய விதம் காட்சி விருந்தாக அமைந்திருக்கிறது. 


குருடாயிலை திருடி விற்கும் கும்பலின் கதையை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் தமிழக மக்களுக்கான பிரச்சனை என்பதை அழுத்தமாக பதிவு  செய்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி .


ரேட்டிங் - 3 .5 / 5


Comments


©2020 by MediaTalks. 

bottom of page