' டியூட்' - விமர்சனம்
- mediatalks001
- Oct 18
- 1 min read

நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் அவருக்கு துணையாக பால்வளத்துறை அமைச்சரான தாய் மாமன் சரத்குமாரின் மகள் மமிதா பைஜூ இருக்கிறார்.
இந்நிலையில் அண்ணனான சரத்குமாரிடம் பிரதீப் ரங்கநாதனின் அம்மா ரோகிணி பேச்சு தொடர்பில்லாமல் இருக்கிறார்.
தாய் மாமன் சரத்குமாரின் மகளாக மமிதா பைஜூ இருந்தும் அவரை நண்பராக பார்க்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
இந்நேரத்தில் மமிதா பைஜு பிரதீப் ரங்கநாதன் மீது காதல் கொள்ள நண்பராக பார்க்கும் பிரதீப் ரங்கநாதன் அவரது காதலை ஏற்காமல் அவரை நிராக்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் தன் காதலை ஏற்க மறுப்பதால் மமிதா பைஜூ படிப்பதற்காக பெங்களூர் செல்கிறார் .
ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுக்கும் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூவை காதலிப்பதை அப்பா சரத்குமாரிடம் சொல்ல திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை சரத்குமார் செய்கிறார் .
திருமண நேரத்தில் மமிதா பைஜூ தன் கல்லூரியில் படிக்கும் ஹிருது ஹாரூனை காதலிப்பதாக பிரதீப் ரங்கநாதனிடம் சொல்கிறார்.
இந்நிலையில் காதலர்களான மமிதா பைஜுவுடன் ஹிருது ஹாரூனை சேர்த்து வைக்க நினைக்கும் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜுவிடம் அதற்கான திட்டத்தை சொல்கிறார்.
முடிவில் பிரதீப் ரங்கநாதன் தன் திட்டப்படி மமிதா பைஜூவை ஹிருது ஹாரூனிடம் சேர்த்து வைத்தாரா ?
அமைச்சர் சரத்குமார் மமிதா பைஜூவின் காதலை ஏற்று கொண்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'டியூட்'
துடிதுடிப்பான இளைஞராக நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன் ஆக்ஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு இயல்பான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பால்வளத்துறை அமைச்சராக நடித்திருக்கும் சரத்குமார் , பிரதீப் ரங்கநாதனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி, மமிதா பைஜு காதலனாக வரும் ஹிருது ஹாரூன் மற்றும் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையும்,பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
தன் முறை பெண்ணை அவரது காதலனிடம் சேர்க்க நினைக்கும் கணவனின் கதையாக விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், நட்பு, காமெடி, ,குடும்பம் என அனைவரும் ரசிக்கும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.
ரேட்டிங் - 4.5 / 5








Comments