‘ராம் அப்துல்லா ஆண்டனி’ - விமர்சனம்
- mediatalks001
- 6 days ago
- 1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் நெருங்கிய நண்பர்களாக 12ம் வகுப்பு படிக்கும் பூவையார், அஜய்அர்னால்டு , அர்ஜுன் மூவரும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு நாள் தொழிலதிபரான வேல. ராமமூர்த்தியின் பேரனை கொடூரமாக கொலை செய்து அந்த சிறுவன் உடலை மூட்டையில் கட்டி ஊருக்கு ஒதுக்கு புறத்தில் போட்டு விடுகிறார்கள்.
இக்கொலை வழக்கை விசாரிக்க இன்ஸ்பெக்டர்
சாய் தீனா வருகிறார். இந்நேரத்தில் காவல் நிலையத்திற்கு புதிதாக வேலையில் சேரும் சௌந்தரராஜா விசாரணை மேற்கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் சிறுவனை கொலை செய்து பூவையார், அஜய்அர்னால்டு , அர்ஜுன் என தெரிய வர அவர்களை கைது செய்து சிறையில் அடைகிறார்.
இன்ஸ்பெக்டர் சாய் தீனா பூவையார், அஜய்அர்னால்டு , அர்ஜுன் ஆகியோரை சிறையில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார். அவர்களை காப்பாற்ற சௌந்தரராஜா நினைக்கிறார்.
முடிவில் இன்ஸ்பெக்டர் சாய் தீனாவிடம் இருந்து சௌந்தரராஜா 3 பேரை காப்பாற்றினாரா ? இல்லையா?
கொலையான சிறுவனை 3 பேரும் சேர்ந்துதான் கொலை செய்தார்களா? என்பதை சொல்லும் படம்தான் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’
ஆண்டனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூவையார், ராம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் அர்னால்டு, அப்துல்லா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜூன் ஆகிய மூன்று பேரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். நடனம்,சண்டை,செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் சௌந்தரராஜா இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்துக்கு சிறப்பு சேர்க்கிறார் குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சாய் தீனா, தொழிலதிபராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், ஜாவா சுந்தரேசன், கிச்சா ரவி, வினோதினி வைத்யநாதன், ஹரிதா, ரமா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. ஒளிப்பதிவாளர் எல்.கே.விஜயின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
பீடி தொழிற்சாலையால் பொது மக்கள் என்னென்ன பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதை மைய கருவாக வைத்து யாரும் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயவேல்
ரேட்டிங் : 3.2 / 5








Comments