'கிறிஸ்டினா கதிர்வேலன்’ - விமர்சனம்
- mediatalks001
- Nov 9
- 1 min read

பள்ளி படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார் கிராமத்தில் வசிக்கும் நாயகன் கௌஷிக் .
இந்நேரத்தில் நாயகி பிரதீபா கோயில் திருவிழாவில் கௌஷிக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து அவரை காப்பாற்றுகிறார்.
இதனால் பிரதீபாவை ஒரு தலையாக காதலிக்கும் கௌஷிக் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து பிரதீபா படிக்கும் கல்லூரியில் சேர்கிறார்.
இதற்கிடையே கௌஷிக் தனது நண்பரின் பதிவு திருமணத்திற்கு உதவி செய்யும் விதத்தில் தனது ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை கொடுக்கிறார். பெண் சார்பாக பிரதீபாவும் தனது விபரங்களை கொடுக்க, தவறுதலாக கௌஷிக் மற்றும் பிரதீபாவுக்கு திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் கொடுக்கப்பட்டு விடுகிறது.
இந்நிலையில் பெற்றோர்கள் பிரதீபாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்து வைக்கும் நேரத்தில் கௌஷிக் ,பிரதீபா இருவருக்கும் பதிவு திருமணம் நடந்து விட்டதாக இருக்கும் சான்றிதழ் பிரதீபா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது பிரதீபா குடும்பத்தை மட்டுமல்ல கௌஷிக் குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
முடிவில் கௌஷிக் இந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்தாரா? தன் காதலை பிரதீபாவிடம் சொன்னாரா?
இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் கிறிஸ்டினா கதிர்வேலன்’
கதிர்வேலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌஷிக் கிராமத்து இளைஞராக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், பாசம், செண்டிமெண்ட் , சண்டை என அனைத்திலும் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிறிஸ்டினாவாக நடித்திருக்கும் நாயகி பிரதீபா அழுத்தமான கதாபாத்திரத்தை தன் நடிப்பால் அழகாக கையாண்டுயிருக்கிறார்.
பாதிரியாராக வரும் அருள் டி. சங்கர். கௌஷிக் நண்பராக வரும் ‘சில்மிஷம்’ சிவா. சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார்.சஞ்சய் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
பிரகத் முனிசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
காதல் கதையை உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாடும் விதமாகவும் அதே நேரத்தில் இறுதி காட்சியில் யாரும் யூகிக்க முடியாத விதத்தில் ஒரு சஸ்பென்ஸை கொடுத்து பாராட்டும்படியான படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன்
ரேட்டிங் : 3.2 / 5








Comments