’ஆரோமலே’ - விமர்சனம்
- mediatalks001
- Nov 10
- 1 min read

மினி ஸ்டுடியோ சார்பில் எஸ் வினோத் குமார் தயாரிப்பில் . அறிமுக இயக்குனர் சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், மேகா ஆகாஷ், வி.டி.வி கணேஷ், துளசி, சந்தான பாரதி, சிபி ஜெயக்குமார், நம்ரிதா எம்.வி, சந்தியா வின்ஃப்ரெட் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆரோமலே’
நாயகன் கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். கிஷன் பள்ளி பருவத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்க்க அந்த படத்தை பார்த்த பிறகு அவருக்குள் காதல் வருகிறது.
பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை காதல் செய்ய அந்த காதல் அனைத்தும் தோல்வியில் முடிவடைகிறது . இதனையடுத்து தந்தையின் கட்டாயத்தின் பேரில் ஒரு பிரபல மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார்.
அங்கு மேனேஜராக இருக்கும் நாயகி ஷிவாத்மிகாவுடன் முதலில் சண்டை போட பிறகு ஒரு கட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஷிவாத்மிகாவிற்கு காதல் என்றாலே பிடிக்காது.
முடிவில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? கிஷனின் காதலை ஷிவாத்மிகா புரிந்து கொண்டாரா? என்பதே ’ஆரோமலே’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் கிஷன் தாஸ், பள்ளி , கல்லுாரி , வேலைக்கு செல்லும் இளைஞன் என மூன்று தோற்றங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றவாறு நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மேனேஜராக நடித்திருக்கும் நாயகி ஷிவாத்மிகா துணிச்சலான கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார். காதல்,பாசம்,கோபம் என வேறுபட்ட நடிப்பை அழகாக வெளிபிடித்தி அனைவரையும் கவர்கிறார்.
நண்பராக வரும் ஹர்சத் கான் பல இடங்களில் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார்.. விடிவி கணேஷ், துளசி, சந்தானபாரதி, சிபி ஜெயகுமார், நம்ரிதா , சந்தியா வின்ஃப்ரெட் என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சித்து குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்க முடிகிறது. கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
பள்ளி , கல்லுாரி , வேலைக்கு செல்லும் இளைஞன் என்ற மூன்று காலகட்டத்தில் ஏற்படும் காதலை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சாரங் தியாகு இத்திரைப்படத்தை காதல்,நடப்பு, பிரிவு என அனைத்தையும் சரியான விதத்தில் கொடுத்திருக்கிறார்.
மதிப்பீடு :3 /5








Comments