’மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ -விமர்சனம்
- mediatalks001
- 12 hours ago
- 1 min read

ராயபுரத்தில் பிரபல தாதாவாக வாழும் ஆனந்தராஜ் சென்னையின் பல்வேறு ஏரியாவுக்கு ஏஜெண்டுகளை நியமித்து பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மேலிட அதிகாரிகள் ஆதரவில் ஆனந்தராஜ் செய்யும் குற்ற செயல்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் இருக்கும்போது அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, அவரை கைது செய்யும் முயற்சியில் போலீஸ் உயர் அதிகாரி சம்யுக்தா ஈடுபடுகிறார்.
அதே வேளையில் , தொழில் போட்டி காரணமாக உடன் இருக்கும் சிலர் ஆனந்தராஜை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஆனந்தராஜை என்கவுண்டர் செய்ய போலீஸ் உயர் அதிகாரியான சம்யுக்தா முடிவு எடுக்கிறார்.
முடிவில் போலீஸ் உயர் அதிகாரி சம்யுக்தா ஆனந்தராஜை என்கவுண்டர் செய்தாரா?
என்கவுண்டரில் இருந்து ஆனந்தராஜ் உயிர் பிழைத்து மீண்டும் மாஃபியா தொழிலை தொடர்ந்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’மெட்ராஸ் மாஃபியா கம்பேனி’.
கதை நாயகனாக நடித்திருக்கும் ஆனந்தராஜ் அந்த கதாபத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். ஆக்ஷன், காமெடி, வில்லத்தனம், செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காக்கி உடையில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தா இயல்பான நடிப்புடன் அதிரடி சண்டைக்கு காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.
ஆனந்தராஜின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, சசிலயா, முனீஷ்காந்த், ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
அசோக்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .
போலீஸ் – தாதா இருவருக்கு இடையே நடக்கும் மோதலை மைய கருவாக வைத்து நகைச்சுவை கலந்து விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன்
ரேட்டிங் : 3.2 / 5







Comments