'ஐ பி எல்' - விமர்சனம்
- mediatalks001
- Dec 1
- 1 min read

சென்னையில் ட்ராவல்ஸ் கம்பெனியில் கார் ஓட்டுநராக பணி புரியும் கிஷோர், அங்கே அவமானப்படுத்தப்பட மனைவி அபிராமி நகைகளை வைத்து புதிய கார் வாங்கி தர call டாக்ஸி ஓட்டுகிறார்'.
உணவு டெலிவரி செய்யும் டிடிஎஃப் வாசனுடன் அவரது தங்கை காதல் வயப்படுகிறார்.
ஒருநாள் எதிர்பாராமல் சாலையில் பைக்கில் வந்த டிடிஎஃப் வாசன் குறுக்கே வந்த கிஷோரை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு செல்கிறார். அப்போது எதிர்பாராத விபத்தில் சிக்கும் கிஷோர் மூன்று மாதங்களாக வண்டி ஓட்ட முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட தான் ஏற்கனவே பணியாற்றிய ட்ராவல்ஸ் நிறுவனத்தில் தனது காரை வாடகைக்கு விடுகிறார்.
இந்த நேரத்தில் குற்றம் செய்யாத கிஷோரை குற்றவாளியாக்கி தண்டனை பெற்றுக் கொடுக்க அதிகார வர்க்கம் முயற்சிக்க, அவரை காப்பாற்ற அவரது தங்கையின் காதலரான டி.டி.எஃப்.வாசன் முயற்சிக்கிறார்.
முடிவில் டி.டி.எஃப்.வாசன் குற்றம் செய்யாத கிஷோரை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'ஐ பி எல்' (INDIAN PENAL LAW -IPL)
கிஷோர் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
அறிமுக நடிகர் டி.டி.எஃப்.வாசன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டும் தனது தனித்துவத்தை படத்திலும் வெளிக்காட்டி இருந்தாலும், அந்த காட்சி பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி கொடூரமான முகத்தை கச்சிதமாக கையாண்டு மிரட்டுகிறார். மற்றொரு காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன் நடிப்பு அளவு. காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் நடிக்கிறார்.
கிஷோரின் மனைவியாக அபிராமி, முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், போஸ் வெங்கட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் எஸ். பிச்சுமணி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். இருசக்கர வாகன சேசிங் காட்சியை படமாக்குவதில் கடினமாக உழைத்திருந்தாலும், பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.
சில நேரங்களில் அப்பாவி மக்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதே நேரத்தில் சிறை படுகொலைகளின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை கதையாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் எழுதி இயக்கியிருக்கிறார் கருணாநிதி.
ரேட்டிங் - 3 / 5








Comments