top of page

‘அங்கம்மாள்’ - விமர்சனம்

  • mediatalks001
  • Dec 5
  • 1 min read
ree

இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம்  பால் வியாபாரம், விவசாயம் என கடுமையாக உழைத்து  தைரியமான பெண்ணாக 

 தனது இரண்டு மகன்களை காப்பாற்றுகிறார்.   


மூத்த மகனான விவசாயி பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இளைய மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். அவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். 


ஜாக்கெட் அணியாத பழமைவாத பெண்மணியாக இருக்கும் தனது அம்மாவை பார்த்து பெண் வீட்டார்  தவறாக நினைப்பார்கள் என்பதாலும், காலத்துக்கு ஏற்ப தனது அம்மாவும் மாற வேண்டும் என்பதாலும், அம்மா ஜாக்கெட் அணிய வேண்டும் என்று விரும்புகிறார். இதனால், தனது அண்ணியின் உதவியோடு தனது அம்மாவை ஜாக்கெட் அணிய வைக்கிறார்.

 

மற்றவர்களுக்காகவே குடும்பத்தார் தன்னை மாற்ற முயற்சிக்கிறார்கள், என்பதை அறிந்து கொள்ளும் கீதா கைலாசம், எப்போதும் போல் சுதந்திரமாகவும், தனக்கு பிடித்தது போலவும் வாழ முடிவு செய்கிறார்.  


முடிவில் கீதா கைலாசம் தனக்கு பிடித்தது போல வாழ்ந்தாரா ?


குடும்பத்தார் நினைத்தபடி மற்றவர்களுக்காகவே தன்னை மாற்ற முயற்சித்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் ‘அங்கம்மாள்’


அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கீதா கைலாசம்  ஜாக்கெட் அணியாமல் நடித்து  சுருட்டு பிடிக்கும் பெண்ணாக  உடல் மொழியில் தைரியம் கொண்ட கம்பீரமான பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் 

அங்கம்மாளின் மூத்த மகனாக நடித்திருக்கும் பரணி, அவரது மனைவியாக நடித்திருக்கும் தென்றல், இளைய மகனாக நடித்திருக்கும் சரண், அவரது காதலியாக நடித்திருக்கும் முல்லையரசி, சரணின் நண்பராக நடித்திருக்கும் சுதாகர், சிறுமி யாஷ்மின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பக்க பலம் 


ஒளிப்பதிவாளர் அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவும் இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் இசையும் ப்டத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

பெருமாள் முருகனின் சிறுகதையான அங்கம்மாள் என்ற பெண்மணியின் வாழ்க்கையை  இயல்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி  இயக்கியுள்ளார் இயக்குனர்  விபின் ராதாகிருஷ்ணன் 

 

ரேட்டிங் -  3 .5 / 5


Comments


©2020 by MediaTalks. 

bottom of page