top of page

‘நிர்வாகம் பொறுப்பல்ல’ - விமர்சனம்

  • mediatalks001
  • Dec 6
  • 1 min read

ree

மோசடி பேர் வழியான நாயகன் கார்த்தீஸ்வரன் அனைத்து விதமான   மோசடிகளை செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதித்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார். 

 

போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? அதை அவர் சாமர்த்தியமாக  செய்வதற்கு என்ன காரணம் ? என்பதை சொல்லும் படம்தான்  ‘நிர்வாகம் பொறுப்பல்ல’


படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என பலவித கெட்டப்புகளில்  நடிப்பு நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார்.


கார்த்தீஸ்வரனின் மோசடி குழு உறுப்பினராக நடித்திருக்கும் ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என அனைவரும்  சிறப்பாக நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்திற்கு பக்க பலம்.


மிக குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தருவதாக கூறி கார்ப்பரேட் நிறுவனம் மூலம் நடத்திய மோசடி முதல் தற்போது நடக்கும் ஆன்லைன் மோசடிகள் வரை, அனைத்து விதமான மோசடிகளையும்  சொல்வதுடன் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.கார்த்தீஸ்வரன்,   

 

 ரேட்டிங் - 3 / 5


Comments


©2020 by MediaTalks. 

bottom of page