top of page

‘கொம்புசீவி’  - விமர்சனம்

  • mediatalks001
  • 5 days ago
  • 1 min read

ree

வைகை அணை கட்டுவதற்காக சுற்றியுள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. அணையின் நீர் மட்டம் குறைந்து, அவர்களது நிலம் தெரியும் போது அவர்கள் அங்கு விவசாயம் செய்கிறார்கள். மீண்டும் அணை நிரம்பியதும் அவர்களது நிலம் தண்ணீரில் மூழ்கி விடுவதால் அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள்.


அதனால், கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். கிராம மக்கள் தலைவராக பார்க்கும் சரத்குமார் அவர்களுக்கு துணையாக இருக்கிறார்.


அவரும் கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபட்டாலும், அனைத்தும் கிராம மக்களுக்காகவே என்பதால், அவரை தலைவராகவே கிராம மக்கள் பார்க்கிறார்கள்.

 

இதற்கிடையே ஒரு பிரச்சனையால் தனது பெற்றோரை இழந்த சண்முக பாண்டியன், சிறு வயதில் சரத்குமாருடன் வேலைக்கு சேர்ந்து அவருடன் இணைந்து கஞ்சா கடத்தல் சம்பவங்களில்  ஈடுபட்டு காவல் அதிகாரிகளுடனான  பகையுடன் இருவரும் பணத்தை அதிகமாக சம்பாதிக்கின்றனர்.  


இறுதியில்  காவல் அதிகாரிகளின் பகையில் இருந்து இருவரும் மீண்டார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘கொம்புசீவி’ 


கதையின் நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த அதிரடி நாயகனாக மிரட்டுகிறார்.

தலைமுடி மற்றும் தாடி முழுவதும் நரைத்த, தாத்தா போன்ற ஒரு கெட்டப்பில் மாமனாக நடித்திருக்கும் சரத்குமார், நாயகனுக்கு இணையாக நடித்திருக்கிறார் சரத்குமாரின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

காவல்துறை அதிகாரியாக நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்னிகா, காவலர்களாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா  காவல்துறை அதிகாரியாக வில்லத்தனம் காட்டி நடித்திருக்கும் சுஜித் சங்கர், சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, ராம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் திரைக்கதைக்கு பக்க பலம் . 


யுவன் சங்கர் ராஜாவின் இசையுடன், இளையராஜா பாடிய பாடலும்  

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம். 


அணையின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்வதுடன் வழக்கமான கமர்ஷியல் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பொன்ராம்.


ரேட்டிங் -  3 / 5


Comments


©2020 by MediaTalks. 

bottom of page