‘ரெட்ட தல’ - விமர்சனம்
- mediatalks001
- Dec 27, 2025
- 1 min read

பாண்டிசேரியில் வளரும் நாயகன் அருண் விஜய்யும் நாயகி சித்தி இதானியும் காதலிக்கின்றனர்.
காதலித்த சில மாதங்களில் வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற அருண் விஜய் சில வருட இடைவெளிக்குப் பிறகு காதலி சித்தி இதானியை சந்திக்க வருகிறார்.
சித்தி இதானி அருண் விஜயை விட பணத்தின் மீது அதீத மோகம் கொண்டவராக இருக்கிறார்.
உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும் எனக் கூறுகிறார்.
மனம் உடைந்த அருண் விஜய் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வேகமாக வரும் விலையுர்ந்த கார் அவர் மீது மோத மயக்க நிலையில் தன்னைப் போலவே உருவம் கொண்ட பணக்கார விஜய்யை சந்திக்கிறார்.
இந்நிலையில் அருண் விஜய் பணக்கார விஜய் வீட்டிற்கு செல்ல, அங்கு அருண் விஜய்யை தன்னை போல ஸ்டைலாக மாற்றுகிறார். இருவரும் நண்பர்களாகின்றனர்.
இந்த விஷயம் காதலி சித்தி இதானிக்கு தெரிய வருகிறது.
பணக்கார அருண் விஜய்யின் பணத்தின் மீது ஆசைப்படும், சித்தி இதானி தன் காதலர் அருண் விஜய் மூலம் அவரது பணத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார்.
அதன் பிறகு அருண் விஜய் சந்திக்கும் பிரச்சனைகளை விறுவிறுப்பாக சொல்லும் படம்தான் ‘ரெட்ட தல’
இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண் விஜய், மிக சிறப்பான நடிப்பில் தோற்றத்தில் மட்டும் இன்றி ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார் அருண் விஜய்,
இது வரை ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் சித்தி
இதானி , தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், யோகி சாமி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
டிஜோ டாமியின் ஓளிப்பதிவு தரத்துடன் படம் முழுவதையும் ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில், தனுஷ் குரலில் “கண்ணம்மா..” பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசை மிரட்டல் ரகம்.
பொழுது போக்கு அம்சங்களுடன் பரபரப்பான திரைக்கதை அமைப்பில் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார் கிரிஷ் திருக்குமரன்
ரேட்டிங் - 3.5 / 5








Comments