‘காந்தி டாக்ஸ்’ - விமர்சனம்
- mediatalks001
- 4 days ago
- 1 min read

Zee Studios வழங்க, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி, மகேஷ் மஞ்சரேக்கர், பிரியதர்ஷினி இந்தல்கர், சித்தார்த் ஜாதவ், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காந்தி டாக்ஸ்’.
மும்பையில் குடிசைப் பகுதியில் வசிக்கும் விஜய்சேதுபதி வேலையில்லாததால் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படும் நிலையில் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். அவருடைய எதிர் வீட்டில் வசிக்கும் அதிதி ராவ் காதலிக்கிறார்.
மற்றொரு பக்கம் பெரும் தொழில் அதிபரான அரவிந்த் சாமி மற்றவர்கள் வாங்கிய லஞ்சங்களால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழக்கிறார்.
அரவிந்த் சாமியின் குடும்பத்தினரும் எதிர்பாராத விதமாக இறந்து விடுகின்றனர். அரசாங்கம் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்கிறது
இதே நிலையில் வேலைக்காக நேர்காணலுக்கு செல்லும் விஜய்சேதுபதிக்கு மேலாளர் மற்றவரிடத்தில் லஞ்சத்தை வாங்கி கொண்டு வேலை கொடுக்க மறுக்கிறார்..
இதனையடுத்து விஜய்சேதுபதி பணத்திற்காக அரவிந்த் சாமி வீட்டிற்கு திருட
செல்கிறார்.
அதன் பின் அரவிந்த் சாமி வீட்டில் இருந்து பணத்தை விஜய் சேதுபதி திருடினாரா ? தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழந்த அரவிந்த் சாமி செய்தது என்ன ? என்பதுதான்‘காந்தி டாக்ஸ்’ படத்தின் மீதிக்கதை.
வறுமையில் வாடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்சேதுபதி அனைத்து காட்சிகளிலும் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மிகப்பெரும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி உணர்வுப்பூர்வமான நடிப்பில் பார்வையாலே படம் முழுவதும் பேசி ரசிகர்களை கவர்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ், காதல், பாசம், அக்கறை என அனைத்திலும் தன் சிறப்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்
அசத்தலான நடிப்பில் திருடனாக நடித்திருக்கும் சித்தார்த் ஜாதவ்,
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்ணணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்
இன்றைய காலத்தில் லஞ்சத்தில் வாழும் அரசியல்வாதிகளுடன் நீதி துறையும் சிக்கி சீரழிவதை சொல்வதுடன் படத்தில் வசனம் இல்லை என்றாலும் மனிதனின் பிரச்சனையான வாழ்க்கைக்கு ஒரே தீர்வு பணம் தான் என்பதை சமூக அக்கறை கொண்டு சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர்.
ரேட்டிங் - 3.5 / 5








Comments