MediaTalks Logo
Header Advertisement
reviews
1 February 2026 at 13:42•1 Views

'மெல்லிசை’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
'மெல்லிசை’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

உடற்கல்வி ஆசிரியராக தனியார் பள்ளியில் பணியாற்றுகிறார் கிஷோர், அவருடைய மனைவியான சுபத்ராவும் அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். இவர்களுக்கு ஜஸ்வந்த் மணிகண்டன்என்ற மகனும், தனன்யா வர்ஷினி என்ற மகளும் இருக்கிறார்கள்.

நாயகன் கிஷோருக்கு சொந்தமான வீட்டுடன் அன்பான குடும்பத்தில் அமைதியாக வாழ்ந்தாலும் பாடகராக வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமல் போனதால் மன வேதனையில் இருக்கிறார்.

கிஷோரின் மகள் தனன்யா வர்ஷினி தனியார் டிவி நிறுவனம் நடத்தும் பாட்டு போட்டியில் தன்னுடைய அப்பா பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

கிஷோர் பாடகர் ஆனதால் பாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுப்பதில் ஏற்படும் பிரச்சனையில் பள்ளி மேலாளரால் அவருடைய வேலையும் பறிபோகிறது. ஒரு கட்டத்தில் கிஷோர் இசை முயற்சியும் தோல்வியடைகிறது

இறுதியில் நாயகன் கிஷோர் பாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பாடகர் ஆனாரா ? பள்ளி மேலாளரால் பறிபோன உடற்கல்வி ஆசிரியர் வேலை மீண்டும் கிடைத்ததா ? இல்லையா? என்பதே ‘மெல்லிசை’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர் குமார் குடும்ப தலைவர் கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்

கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் இயல்பாக நடித்து அனைவரது கவனம் ஈர்க்கிறார்.

கிஷோரின் மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன், இருவருமே திரைக்கதைக்கு பலமாக இருக்கின்றனர். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

சங்கர் ரங்கராஜின் இசையில் இனிமையான பாடல்களுடன் ,பின்னணி இசையும், ,ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

ஒரு இயல்பான மனிதனின் வாழ்க்கையில் ஆசை, லட்சியம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், தோல்வி ஆகியவற்றை மையமாக கொண்ட கதையுடன் மனிதர்களின் ஆழமான உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்து ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமான கதையாக பாராட்டும்படி எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் திரவ்.

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: