MediaTalks Logo
Header Advertisement
reviews
15 February 2026 at 15:30•1 Views

'மைலாஞ்சி' - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
'மைலாஞ்சி' - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் இயக்குநர் அஜயன் பாலா இயக்கத்தில்  ’மைலாஞ்சி ’

ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், முனிஷ்காந்த், சிங்கம்புலி ஆகியோர்

நடித்துள்ளனர் .

பறவைகள் முதல் வன விலங்குகளை ஆர்வமாக புகைப்படம் எடுக்கும் வன விலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அரியவகை பறவையை படம் எடுக்க தனது நிறுவனத்திற்காக ஸ்ரீராம் கார்த்தி ஊட்டிக்கு செல்கிறார்.

நாயகி கிரிஷா குருப் ஊட்டியில் மைலாஞ்சி என்ற பெயரில் ஒரு பறவைகள் பூங்காவை நடத்தி வருகிறார். கிரிஷா குருப்பின் சித்தி தன்னுடைய தம்பிக்கு கிரிஷா குருப்பை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

கிரிஷா குரூப் அதிலிருந்து தப்பிக்க தன் வீட்டருகே வாடகைக்கு குடியிருக்கும் ஒருவரை காதலிக்கிறார்.

அவரிடம் தன்னுடைய காதலை சொல்ல நினைக்கும் சமயத்தில் அவர் வீட்டை காலி செய்து விட்டு சென்னைக்கு போய் விடுகிறார்.

இந்நிலையில் ஊட்டியில் பறவையை படம் எடுக்க செல்லும் ஸ்ரீராம் கார்த்தி கிரிஷா குருப்பை சந்திக்கிறார்.

இச் சுழலில் நாயகன் ஸ்ரீராம் கார்த்தி தன் காதலை நாயகி கிரிஷா குருப்பிடம் சொல்ல நினைக்கையில் கிரிஷா குரூப் தன் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவரை காதலித்ததாகவும் அவர் இப்போது சென்னையில் வேலை பார்த்து வருவதாகவும் அவருடன் சேர்த்து வைக்குமாறு கூறுகிறார்.

கிரிஷா குரூப் சொல்லும் நபரை தொடர்பு கொள்ள எதுவுமே இல்லாததால் மின்னஞ்சலை உருவாக்கி அதன் மூலம் அந்த நபரை ஸ்ரீராம் கார்த்தி தேடுகிறார். அந்த நபரிடம் இருந்து எந்த தகவலும் வராததால் இவரே போலியாக அந்த நபர் போல் மெசேஜ் செய்கிறார்.

இதையடுத்து தன் காதலை மறந்து கிரிஷா குரூப்பை அவரது காதலருடன் சேர்த்து வைப்பதில் தீவிரம் காட்டும் ஸ்ரீராம் கார்த்தி

கிரிஷா குரூப் காதலரை கண்டு பிடித்து ஊட்டிக்கு வரவழைக்கிறார்.

ஒரு கட்டத்தில் கிரிஷா குரூப் ஸ்ரீராம் கார்த்திக்கை மனதார காதலிக்கிறார் . அதை ஸ்ரீராம் கார்த்தியிடம் சொல்ல முற்படும்போது கிரிஷா குரூப் காதலர் அவரது குடும்பத்தினரை சந்தித்து கிரிஷா குரூப்பை திருமணம் செய்து கொள்வதாக சொல்ல திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் நடக்கிறது.

இறுதியில் கிரிஷா குரூப் தன் காதலரை திருமணம் செய்து கொண்டாரா? ஸ்ரீராம் கார்த்தியிடம் தன் காதலை தெரியப்படுத்தினாரா? இல்லையா? என்பதுதான் மைலாஞ்சி படத்தின் மீதிக்கதை.

வன விலங்கு புகைப்படக் கலைஞரான நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், இயல்பான நடிப்பில் காதல் , நடனம் , செண்டிமெண்ட் என அனைத்திலும் உணர்வுபூர்மான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் கிரிஷா குரூப் அழகு தேவதையாக எதார்த்த நடிப்பில் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி வரும் காட்சிகளில் சிரிக்க முடிகிறது. கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக நடித்திருக்கும் நபர், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி,நாயகியின் சித்தியாக நடித்திருக்கும் நடிகை என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க முடிகிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.

செழியனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் உள்ளது.

காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகனின் காதல் உணர்வுகளை கதையாக வைத்து இயல்பான காதல் வாழ்வியலுடன் உணர்வு பூர்வமான காதல் படமாக எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் அஜயன் பாலா

ரேட்டிங் - 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: