’ரூம் பாய்’ - விமர்சனம்
- mediatalks001
- 14 hours ago
- 2 min read

ஏசிஎம் சினிமா சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் ஜெகன் ராயன். இயக்கத்தில் ’ரூம் பாய்’
நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி ,பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர் ,அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், நிதிமரோலி ஆகியோர் நடித்துள்ளனர்.
’.
ஏலகிரியில் இருக்கும் ஒரு தனியார் ஹோட்டலான தங்கும் விடுதியில் இளைஞர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களை கட்டாயப்படுத்தி அவர்களின் சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து. தப்பி செல்ல நினைப்பவர்களை ஓட்டல் மேனேஜர் அடித்து உதைத்து அடிமைத்தனமாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொல்கிறார்.
மேலும் ஒரு கும்பல் அந்த ஹோட்டலில் ஒவ்வொரு அறையிலும் ரகசிய கேமரா வைத்து, அந்த ஹோட்டலில் வந்து தங்கும் ஜோடிகளை அவர்களின் வீடியோக்களை பதிவு செய்து, அதனை காட்டி அவர்களிடம் பிளாக்மெயில் செய்து பணத்தை பறிப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் செய்கிறார்கள்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியேறிய வரும் நாயகன் நிகில் ஏலகிரிக்கு வருகிறார். இச் சுழலில் குயின் மார்க் ஹோட்டலில் நிகில், அவரது நண்பர் காத்து கருப்பு இருவரும் வேலைக்கு சேர்கின்றனர்
நாயகன் நிகில் அந்த ஓட்டலில் நடக்கும் சம்பவங்களை பார்த்து கண்டும் காணாமல் இருந்து வருகிறார்.
இதே வேளையில் கூர்நோக்கு இல்லத்தின் வார்டன் திடீர் என காணாமல் போக அவர் குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஊரை சுற்றிப் பார்க்க ஓட்டலுக்கு வரும் நாயகி ஹர்ஷாவை பார்த்தும் நிகில் காதல் கொள்கிறார்.
இதே சமயம் புதுமண ஜோடி ஒன்று அங்கு தங்க வருகிறார்கள். அவர்களுடைய அறையில் ரகசிய கேமரா இருப்பதை பார்த்து இது குறித்து மேனேஜரிடம் கூறுகிறார்கள். மேனேஜர் வந்து பார்த்தால் அது போல கேமரா ஒன்றும் இல்லாமல் இருக்கிறது .
இதனையடுத்து முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மேனேஜரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருக்கும் ஹார்ட் டிஸ்கை எடுத்து செல்கிறார். மேனேஜர் கொலை மற்றும் ஆதாரங்கள் காணாமல் போனதால் அந்த ஹோட்டல் உரிமையாளர் அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியில் முகமூடியுடன் மேனேஜரை கொலை செய்த மர்ம நபர் யார்? மேனேஜரை கொலை செய்ய காரணம் என்ன ? காணாமல் போன கூர்நோக்கு இல்ல வார்டன் கிடைத்தாரா? இல்லையா? என்பதுதான் ’ரூம் பாய்’ படத்தின் மீதிக்கதை.
சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகன் நிகில் இளமை துடிப்பு மிக்க இளைஞர் கதாபத்திரத்தில் தங்கை பாசம், நட்பு , குறிப்பாக சண்டை காட்சிகளில் காட்டும் அதிரடி ஆக்ஷனுடன் மனதில் இருக்கும் சோகத்தை வெளிபடுத்தும் உணர்வு ப்பூர்வமான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .
நாயகியாக நடித்திருக்கும் ஹர்ஷா படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் இயல்பாக நடித்துள்ளார். .
காத்து கருப்பு கலை வரும் காட்சிகள் ரசிக்க முடிகிறது.
ஹோட்டல் அதிபராக நடித்திருக்கும் அருண் ராஜா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நாயகன் அப்பாவாக வரும் பிர்லா போஸ் , இமான் அண்ணாச்சி, மும்பை மாடல் அழகி நிதிமரோலி என படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் சி பாரதி ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மையமாக வைத்து ரகசிய கேமரா , கள்ளத் தொடர்பு. பணம் பறிப்பு என விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் பெண் குழந்தைகள் தெரிந்தவர்கள் மூலமே எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று அழுத்தமாக பதிவு செய்து ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்று யாரும் யூகிக்க முடியாத விதத்தில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன்
மொத்தத்தில் ’ரூம் பாய்’ – வல்லவன்
ரேட்டிங் : 3 / 5





Comments