’29’ - விமர்சனம்
- mediatalks001
- May 8
- 2 min read

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜி-ஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் ’29’
விது ,பிரீத்தி அஸ்ரானி,மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரதீப் பிரேம்குமார் ஆகியோர் நடித்துள்ளனர் .
சேலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த 29 வயது இளைஞனான நாயகன் விது வேலை தேடி சென்னை வருகிறார் .
சென்னையில் ஒரு சாதாரண மேன்ஷனில் தங்கி வேலை பார்த்து வரும் நாயகன் விது தான் யார்? என்ற அடையாளத்தை தேடி வருகிறார்.
விது வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் நாயகி பிரீத்தி அஸ்ரானியும் வேலைக்கு சேருகிறார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக நாளடைவில் இருவரும் காதலர்களாகின்றனர் .
நாயகி பிரீத்தி அஸ்ரானியின் காதலை தனக்கு கிடைத்த அடையாளமாக நினைத்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நாயகன் விது.
இச் சுழலில் நாயகி பிரீத்தி அஸ்ரானி சிறுவயதில் இருந்து I A S படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் விதுவிடம் காதல் மட்டுமே அடையாளம் இல்லாமல் உன்னை நீயே அடையாளப்படுத்தி அனைவரும் பாராட்டும்படி சாதிப்பதுதான் வாழ்க்கை என்பதை புரிய வைக்க பிரீத்தி அஸ்ரானி முயற்சிக்கிறார்.
பிரீத்தி அஸ்ரானி சொல்வதை ஏற்க மறுக்கும் விது அவர் காதலை முறித்துக் கொண்டு அவரை விட்டு பிரிகிறார் .
இந்நிலையில் விதுவின் பிரச்சனையினால் I A S தேர்வு சரியாக எழுத முடியாததால் நாயகி பிரீத்தி அஸ்ரானி சென்னையை விட்டு டெல்லி சென்று விடுகிறார்.
காதல் தோல்வியால் தன் கிராமத்துக்கு செல்லும் நாயகன் விது கிராம மக்களுடன் அங்கு ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கல்லூரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
அதனால் ஏற்படும் கலவரத்தில் சிறைக்கு செல்லும் நாயகன் விதுவை சிறையில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார் கல்லூரியின் தாளாளர் பிரதீப்பின் மகனான மாஸ்டர் மகேந்திரன் .
இறுதியில் நாயகன் விது சிறையில் மாஸ்டர் மகேந்திரனின் ஆட்களிடமிருந்து தப்பித்தாரா ? கிராம மக்களின் நலனுக்காக கல்லூரி நிர்வாகத்திடம் ஏரியை கைப்பற்றி தனது அடையாளத்தை நாயகன் விது நிருபித்தாரா ?
பிரீத்தி அஸ்ரானியை விது மீண்டும் சந்தித்தாரா ? இல்லையா? என்பதுதான் ’29’ படத்தின் மீதிக்கதை.
சத்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விது இளமை துள்ளலுடன் துடிப்பு மிக்க இளைஞராக காதல், தாய் -தந்தை பாசம், சமூக நலன் என கதாபாத்திரத்துடன் இணைந்து உணர்வுபூர்வமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி பிரீத்தி அஸ்ரானி இயல்பான நடிப்பில் படிப்பு & காதல் இரண்டையும் கலந்த உடல் மொழியில் தன் நடிப்பால் கதாபாத்திரத்துடன் வாழ்ந்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், ரசிக்க வைக்கும் நடிப்பில் நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அவினாஸ், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டியலக்ஷ்மி, நாயகனின் அப்பாவாக நடிக்கும் ஆறுமுகவேல் ,நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சிந்து ஷியாம், நாயகியின் அப்பாவாக வரும் பிரேம்குமார் என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்,
ஒரு இளைஞன் தனக்கான அடையாளத்தைத் தேடும் கதையை மையமாக கொண்டு இயல்பான காதலுடன் ,மக்கள் நலன் , லட்சியம் , அம்மா பாசம், என ஆரம்பம் முதல் இறுதி வரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்கும் வசனங்களுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.
மொத்தத்தில் ’29’ – லட்சியமான காதலின் அடையாளம்
ரேட்டிங் - 3.5 / 5





Comments