‘கருப்பு' - விமர்சனம்
- mediatalks001
- 1 day ago
- 2 min read

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு'
சூர்யா, திரிஷா, ஆர் ஜே பாலாஜி, நட்டி நட்ராஜ் , இந்திரன்ஸ் , சுவாசிகா, ஷிவதா, வேல ராமமூர்த்தி, ஜார்ஜ் மரியான்,, தீபா சங்கர், லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடித்துள்ளனர் .
கேரள மாநிலத்தில் வசிக்கும் இந்திரன்ஸ் தன்னுடைய மகளின் ஆபரேஷனுக்காக சென்னைக்கு வருகிறார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு பதிலாக அதற்கு முன்னதாக இருக்கும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இந்திரன்ஸ் தன் மகளுடன் இறங்க,, ஆபரேஷன் செலவுக்காக தான் கொண்டு வந்த 60 சவரன் நகைகளை வழிப்பறி திருடர்கள் கொள்ளையடிக்கின்றனர் .
நகைகளை பறிக் கொடுத்த இந்திரன்ஸ் ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் .
புகாரின் அடிப்படையில் காவல் துறை கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கண்டுபிடித்து இந்திரன்ஸ்னிடம் ஒப்படைக்கும்போது 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திருப்பி கொடுக்கும் நிலையில் மீதம் 15 பவுன் இல்லை என்றும் அதனை திருடர்களை எடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர்
மேலும் கிடைத்த நகையை இந்திரன்ஸ் கையில் கொடுக்காமல் நீதிமன்றத்தின் மூலமாக பெற்றுக் கொள்ள சொல்லுகிறார்கள்.
இந்நிலையில் போலீஸ் கான்ஸ்டபிளான மாறன் இந்திரன்ஸ்னிடம் ஏழு கிணறு நீதிமன்றத்திற்கு சென்று வழக்கறிஞரான ஆர் ஜே பாலாஜியை சந்திக்க சொல்கிறார்..
ஏழு கிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் செல்வாக்கு படைத்த வழக்கறிஞர் ஆர் ஜே பாலாஜி . அந்த நீதி மன்றத்தின் நீதிபதி நட்டி நட்ராஜி க்கு லஞ்சம் கொடுத்து எல்லா வழக்குகளிலும் வெற்றி பெற்று அந்த நீதி மன்றத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.
இந்திரன்ஸ் வழக்கை நடத்தும் ஆர்.ஜே. பாலாஜி பணத்திற்காக சாதாரணமான இந்த வழக்கை நான்கு மாதங்களுக்கு மேல் இழுத்துக்கொண்டே போக ஒரு கட்டத்தில் ஆர் ஜே பாலாஜியால் நமக்கு நீதி கிடைக்காது என இந்திரன்ஸ் தெரிந்து கொள்கிறார்.
.
பொறுமை இழந்த இந்திரன்ஸ் தன்னுடைய நகை கிடைக்கவில்லை என்ற கோபத்திலும் வெறுப்பிலும் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் கருப்பு சாமி கோவிலுக்கு சென்று தன்னுடைய மன வேதனையை வெளிப்படுத்தி மிளகாய் அரைத்து அந்த கருப்பசாமி மீது கண்ணிர் மல்க பூசுகிறார்.
அந்த நேரத்தில் இந்திரன்ஸின் கண்ணீரை துடைப்பதற்காக கருப்பசாமி சூர்யா உருவத்தில் தோன்றுகிறார் .
இந்த பிரச்சனையினால் பக்தரை காப்பாற்ற வரும் சூர்யாவிற்கும் ஆர் ஜே பாலாஜிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
மோதலில் சூர்யாவிடம் உங்கள் சக்திகளை பயன்படுத்தாமல் ஒரு மனிதனாக நீதிமன்றத்தில் நேர்மையாக உன்னால் வெற்றி பெற முடியுமா , நீ கடவுளாக இருந்தாலும் என்னை மாற்ற முடியாது என்று சவால் விடுகிறார் ஆர்.ஜே. பாலாஜி.
இறுதியில் கருப்பசாமியான சூர்யா இந்திரன்ஸ் வழக்கை வெற்றிகரமாக முடித்து கொடுத்தாரா? இந்திரன்ஸ் தனது மகளை காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதுதான் ‘கருப்பு ’ படத்தின் மீதிக்கதை.
ஆக்ரோஷமான நடிப்பில் கருப்பசாமியாக வந்து களமிறங்கும் சூர்யா ஒரு பக்கம் வக்கீல் சரவணனாக நீதி , நேர்மை , நியாயம் என மறு பக்கம் கருப்பசாமியாக நடனம், அதிரடி சண்டை , ஆக்ரோஷம் என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வக்கீலாக நடித்திருக்கும் த்ரிஷா இயல்பான நடிப்பில் அனைவரின் கவனத்தையும் பெறுகிறார்.
பேபி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி யாரும் எதிர்பார்க்காத மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்துகிறார் .
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் இந்திரன்ஸ் , நீதிபதியாக வரும் நட்டி நடராஜன், சுவாசிகா, ஷிவதா, ஜார்ஜ் மரியான், வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், லொள்ளு சபா மாறன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்.
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சில வழக்கறிஞர்கள் செய்யும் அவலமான முறைகேடுகளை மையமான கொண்ட கதையுடன் தெய்வமே அவதாரம் எடுத்து வந்தால்தான் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க முடியும் என்பதை திரைக்கதையில் நீதிமன்றத்தை தோலுரித்து அழுத்தமாக சொல்வதுடன் பரபரப்பான அனைவரும் ரசிக்கும் விதத்தில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி .
மொத்தத்தில் ‘கருப்பு ’ – நீதி கிடைக்க போராடும் மக்களை காக்கும் கடவுள்
ரேட்டிங் - 3 / 5





Comments