MediaTalks Logo
Header Advertisement
reviews
30 May 2026 at 23:34•1 Views

’காட்டாளன்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
’காட்டாளன்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

கியூப்ஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் ஷரிஃப் முகமது தயாரிப்பில் பால் ஜார்ஜ் இயக்கத்தில் 'காட்டாளன்'

ஆண்டனி வர்கீஸ் பெப்பே, சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், ராஜ் திரன்தாசு, பார்த் திவாரி,ஹரிசங்கர் நாராயணன், சந்தீப் ரவிராஜ் மற்றும்  அல்போன்ஸ் புத்ரன், லோகேஷ் கனகராஜ் (கேமியோ) ஆகியோர் நடித்துள்ளனர்

கேரள எல்லை பகுதியில் உள்ள ஆனைக்கொல்லி என்ற மலைக் கிராமத்தில் அப்பாவி பழங்குடியின மக்கள் யானை கூட்டங்களால் அடித்துக் கொலை செய்யப்படுகிறார்கள்.

இதனையடுத்து யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் சுனிலிடம் பழங்குடியின கிராம மக்கள் உதவி கேட்கிறார்கள்.

சுனில் அங்கு வாழும் பழங்குடியின மக்களை அடிமைப்படுத்துவதுடன் அங்குள்ள யானைகளை கொன்று அதனுடைய தந்தங்களை கடத்தி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சுனில் இடத்தை பிடிக்க நினைக்கும் கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை உயர் அதிகாரி உதவியுடன் கைப்பற்றுகிறார்.

பறிபோன தன்னுடைய தந்தங்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக நாயகனான ஆண்டனி வர்கீஸை சுனில் வரவழைக்கிறார்.

இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரியை ஏமாற்றி இழந்த தந்தத்தை மீட்டெடுப்பதோடு ஆண்டனி வர்கீஸ் சுனில் மனதில் இடம் பிடிக்கிறார்.

ஒரு கட்டத்தில் சுனிலுக்கு துணையாக இருந்த ஆண்டனி வர்கீஸ் அங்கு இருக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக இருப்பதால் சுனில் ஆண்டனி வர்கீஸை கொலை செய்ய முடிவு செய்கிறார்.

ஆண்டனி வர்கீஸை அழிக்க முடிவு செய்யும் சுனில், தனது எதிரியான கபீர் துகான் சிங் உடன் கைகோர்க்கிறார். அதே நேரத்தில் , கடத்தல்காரர்களுக்கு எதிராக பழங்குடியின மக்களை ஒன்று திரட்டுகிறார் ஆண்டனி வர்கீஸ்.

இறுதியில் ஆண்டனி வர்கீஸை திட்டமிட்டபடி சுனில் கொலை செய்தாரா ? ஆண்டனி வர்கீஸ் பழங்குடியின மக்களுக்கு உதவி செய்தாரா? இல்லையா?

என்பதுதான் ’காட்டாளன்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ் கடத்தல்காரனுக்கு உதவி செய்யும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் போலீஸ் உயரதிகாரி கண் முன்னே தந்தத்தை எடுத்துச் செல்லும் காட்சிகளிலும், அமைதியான முகத்தோடு அதிரடி சண்டைக்காட்சிகளில் மிரட்டலான நடிப்பில் அசத்துகிறார் .

கடத்தல் மன்னனாக சுனில் மிரட்டியிருக்கிறார். மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

நாயகனை காப்பாற்றும் முக்கிய வேடத்தில் துஷாரா விஜயன் நடை, உடை , ஆக்ஷன் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.

பார்த் திவாரி, ,ஹரிஷங்கர் நாராயணன் ,சந்தீப் ரவிராஜ், ராஜ் திரன்தாசு, மற்றும் அல்போன்ஸ் புத்ரன், லோகேஷ் கனகராஜ் (கேமியோ)என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்.

இசையமைப்பாளர் ரவி பசுரூர் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது .

ஒளிப்பதிவாளர் ரெனாடிவ் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இருக்கிறது.

யானை தந்த கடத்தலை மையமாக கொண்ட கதையுடன் பழங்குடியின மக்கள்படும் துன்பம் மற்றும் துயரத்தை திரைக்கதையில் அழுத்தமாக சொல்வதுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை நகர்த்தி அனைவரும் ரசிக்கும் ஆக்ஷன் அதிரடி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பால் ஜார்ஜ்.

ரேட்டிங் - 3.2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: