‘சம்ஹாரம் ‘ - விமர்சனம்
- mediatalks001
- Jun 5
- 2 min read

Vidhya Productions சார்பாக தயாரிப்பாளர் வேல் முருகன் தயாரிப்பில் இயக்குநர் ராம் பிரபா இயக்கத்தில் ‘சம்ஹாரம் ‘
பிரஜின் பத்மநாபன்,ஷருமிஷா, நியா வர்கீஸ்,கணேஷ் சாவரட்டில்.
ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா ஆகியோர் நடித்துள்ளனர் .
ஆடம்பரமான வீட்டில் நாயகன் பிரஜின் தன் இரண்டு தங்கைகளுடன் மனைவி நியா வர்கீஸ் உடன் வாழ்ந்து வரும் நிலையில் தன் பெரிய தங்கையை தன் சொந்த மாமா மகனானபாலியல் வக்கிர புத்தி கொண்ட குற்றவாளி கணேஷ் சாவரட்டிலுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்.
குற்றவாளி கணேஷ் சாவரட்டிலை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாத அவறது பெரிய தங்கை மர்ம நபரால் கொல்லப்படுகிறார்.
இந்நிலையில் இரண்டாவது தங்கை நாயகி ஷருமிஷாவை கணேஷ் சாவரட்டிலுக்கு திருமணம் செய்து கொடுக்க பிரஜின் முற்படுகிறார் .
ஆனால் நாயகி ஷருமிஷா குற்றவாளி கணேஷ் சாவரட்டிலை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இரவு நேரத்தில் பிரஜினுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கேட்டின் முன்பு பிரஜினிடம் மாட்டிக் கொள்கிறார் . ஷருமிஷா தப்பி செல்லாமல் இருக்க அவரை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டிவிடுகிறார்.
ஷருமிஷா வீட்டின் அறையில் இருந்து கொண்டே தன்னுடைய காதலனுக்கு போன் செய்து தன்னுடைய அக்காவுக்கு நடந்த பிரச்சனையை கூறுகிறார்.
அதே போல தன்னையும் குற்றவாளி கணேஷ் சாவரட்டிலுக்கு திருமணம் செய்து வைக்க என் அண்ணன் முடிவு செய்து இருக்கிறார். நீ காப்பாற்றவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறுகிறார்.
தன் காதலி ஷருமிஷாவை காப்பாற்றுவதற்காக வீட்டில் உள்ள அவருடைய அறையில் இரவு நேரத்தில் சென்று விடுகிறார்.
இச் சுழலில் பிரஜின் தன் நண்பரின் கார் பழுதாவதால் ஒரு தந்தையையும், மகளையும் தன் வீட்டில் தங்க அடைக்கலம் கொடுக்கிறார் .
அதே சமயம் ஷருமிஷாவை திருமணம் செய்து கொள்ள பிரஜின் குற்றவாளி கணேஷ் சாவரட்டிலையும் தன்னுடைய வீட்டில் தங்க வைக்கிறார்.
இந்நிலையில் முகமுடி அணிந்த மர்ம நபர் பிரஜினின் வீட்டிற்க்குள் நுழைகிறான் .
இறுதியில் நாயகி ஷருமிஷா பிரஜினிடமிருந்து தப்பித்து தன் காதலனை திருமணம் செய்து கொண்டாரா ?
இரவு நேரத்தில் பிரஜினின் வீட்டில் தங்கிய தந்தையும் -மகளும் யார் ? எதற்காக முகமுடி அணிந்த மர்ம நபர் அந்த வீட்டில் நுழைகிறான்?
தன் மூத்த தங்கையை கொலை செய்த குற்றவாளியை பிரஜின் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘சம்ஹாரம் ‘
கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின் பத்மநாபன் கதாபாத்திரத்துடன் இணைந்து இயல்பான நடிப்பில் மனைவி மீது கொண்ட பாசம் , தவிப்பு , கண்டிப்பு என அனுபவ நடிகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரஜின் பத்மநாபனின் தங்கையாக நாயகி ஷருமிஷா கதைகேற்றபடி உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார் .
மிரட்டும் வில்லனாக கணேஷ் சாவரட்டில், நியா வர்கீஸ், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா ஆகியோர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் V G ஹரி கிருஷ்ணனின் இசையும் ,ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.
ஒரு இரவில் ஆடம்பரமான பங்களா வீட்டில் நடைபெறும் கதையை மையமாக வைத்து விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை யாரும் யூகிக்க முடியாத வகையில் கதையை நகர்த்தி அனைவரும் ரசிக்கும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம் பிரபா.
ரேட்டிங் - 3 / 5





Comments