MediaTalks Logo
Header Advertisement
reviews
5 June 2026 at 12:49•1 Views

’பரிமளா அண்ட் கோ’  - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
’பரிமளா அண்ட் கோ’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், ஜி கே எம் தமிழ்க் குமரன், பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பாண்டிராஜ்  தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’பரிமளா அண்ட் கோ’

ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், யோகிபாபு, மிஷ்கின், சாண்டி மாஸ்டர் , ஜி கே எம் தமிழ்க் குமரன்

ஆகியோர் நடித்துள்ளனர் .

அமைதியான முறையில்  சிக்கனமான வாழ்க்கையில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராம் , ஊர்வசி  தம்பதிகளின்  மூத்த மகள் சஞ்சனா , இளைய மகள் அனந்திகா ஆகியோருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

அதே இடத்தில் போதைப்பொருள் விற்கும்  ரவுடியான சாண்டி ,  ஜெயராம் மகளான அனந்திகாவைக் காதலிப்பதாகச் சொல்லி தொல்லை கொடுக்கிறார்.  மேலும் ஜெயராம்  குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும்  சாண்டி தொல்லை கொடுத்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் சாண்டியின் தொல்லையை தாங்கிக் கொள்ள முடியாத ஜெயராம் குடும்பத்தினர் சாண்டியை கொலை செய்ய நினைக்கிறார்கள்.

மறுநாள் காலையில் சாண்டி திடீர் என கொலை செய்யப்படுகிறார்.

இந்நிலையில் சாண்டியின் கொலை  வழக்கை ஏரியா இன்ஸ்பெக்டர் மிஷ்கின் தீவிரமாக விசாரிக்கிறார்.

மற்றொருபுறம் சாண்டியின்  அம்மா காயத்ரி தன் மகனை கொன்றவனை தேடி வருகிறார், இதே நேரத்தில்   சாண்டியின் நண்பனும் கொல்லப்படுகிறார். இவரைத் தொடர்ந்து  சாண்டியின் அம்மா காயத்ரியும் மர்மமான முறையில் கொலை  செய்யப்படுகிறார்.

இந்நிலையில் ஜெயராம் குடும்பத்திற்கு மர்ம நபரிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் சாண்டியை கொலை செய்திருக்கிறார் என எழுதியிருப்பதை பார்த்து ஜெயராம் குடும்பம் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இச் சுழலில் சாண்டியால் ஜெயராம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதை அறிந்த இன்ஸ்பெக்டர் மிஷ்கினின் விசாரணையில் இருந்து ஜெயராம் மற்றும் ஊர்வசி தன் குடும்பத்தினரை அழைத்து போலீசிடமிருந்து  தப்பிப்பதற்கான யோசனையை சொல்கிறார்கள் .

இறுதியில்  மர்மமான முறையில் சாண்டியை கொலை செய்தது யார்? ஜெயராம் குடும்பத்திற்கும் சாண்டியின்  கொலைக்கும்  தொடர்பு உள்ளதா ? இல்லையா ?  என்பதுதான்  ’பரிமளா அண்ட் கோ’  படத்தின் மீதிக்கதை.

பரிமளா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம்  அனுபவ நடிப்பில் சாண்டியின் கொலையில்  மனைவி , மகள்கள் மீது சந்தேகம் கொண்டு அதை விசாரிக்கும் முறை என ரசிக்கும்படியான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .

ஜெயராம் மனைவியாக நடித்திருக்கும் ஊர்வசி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக கொலை குறித்து மிஷ்கின் விசாரிக்கும் இடத்தில்  அவரது டைமிங் காமெடி அசத்தல் .

ஜெயராம் மூத்தமகளாக வரும் சஞ்சனா மற்றும் இளைய மகளாக வரும் அனந்திகா  இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார்கள்

வீட்டின் உரிமையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகிபாபு வழக்கமான காமெடியில் கலக்கியிருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மிஸ்கின் கொலை குறித்து விசாரிக்கும் முறை ரசிக்கும் விதத்தில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .

சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜி கே எம் தமிழ்க் குமரன் , ரௌடியாக வரும் சாண்டி , சாண்டி அம்மாவாக வரும் காயத்ரி , சென்ராயன் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பாக்ஸன் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

போதைப் பொருள் விற்கும் ரௌடியின்  கொலையால்  பாதிக்கப்படும் குடும்பத்தை மையமாக கொண்ட கதையுடன்  போதை பழக்கம் உள்ள மாணவர்களால் அவர்களுடைய குடும்பம் பாதிக்கப்படுவதை இயல்பாக சொல்வதுடன் போதை இல்லாத நகராக இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை திரைக்கதையில் அழுத்தமாக பதிவு செய்து சஸ்பென்ஸ், திரில்லர், காமெடி என அனைத்தையும் கலந்து ஒரு சுவாரஸ்யமான படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார்  இயக்குநர் பாண்டிராஜ்

மொத்தத்தில் ’பரிமளா அண்ட் கோ’ – சமூக நலனில் அக்கறை

ரேட்டிங்  :  3.5  /  5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: