top of page

‘மக்கள் தலைவா' - விமர்சனம்

  • mediatalks001
  • 3 days ago
  • 2 min read


கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் ‘மக்கள் தலைவா'


ரவி மரியா, அக்க்ஷரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் ஆகியோர் நடித்துள்ளனர் .


கதையின் நாயகனான ரவிமரியா சமுகத்தின் மேல் அக்கறையுள்ள மனிதராக மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அரசுக்கு எதிராக மணல் கொள்ளை ,மது ஒழிப்பு என பல போராட்டங்களின் மூலம் அந்த பிரச்சனைகளுக்கு காரணமானவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு தன் சகாக்களுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.


இந்நிலையில் மதுபான கடைக்கு செல்லும் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் இயக்குநர் பேரரசிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக கேட்ட

பிரச்சனையை ரவிமரியா கையில் எடுக்க ஆளும் கட்சி அமைச்சர் பழ. கருப்பையாவிற்கு இது மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்குகிறது.


பெருந்தலைவர் காமராஜர் கொடுத்த கல்வியால் படித்து பெரிய தொழிலதிபராகும் ராதாரவி தனது அரசியல் நாடகத்தை நிறைவேற்ற ரவிமரியாவை அழைத்து தான் தொடங்கும் உள்ளே வெளியே என்ற புதிய கட்சிக்கு தலைவராக இருக்குமாறு கூறுகிறார்.

அந்தக் கட்சிக்கு ஏழு வண்ணங்களில் கொடியை அமைத்து கட்சி கொடியாக அமைக்கிறார்கள்.


இதன் பின் ராதாரவி என்ன சொல்கிறாரோ அதன் படி அவர் கொடுக்கும் பாத்திரத்தில் கையெழுத்தும் இடுகிறார்.


அதன் பிறகு சினிமாவில் நடித்து பெரிய நடிகராகி புகழ் பெற்று தன் கட்சியின் மூலம் மக்களுக்கு பல திட்டங்களை அறிவித்து தேர்தலில் போட்டியிடுகிறார் ரவி மரியா.


ரவிமரியா முன்னிலையில் உள்ளே வெளியே கட்சியில் ராதாரவி இணைகிறார்.


இச் சுழலில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒரு விபத்தில் ரவி மரியாவுக்கு விபத்து ஏற்பட்டு சுய நினைவு இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தங்களுடைய கட்சி வெற்றி பெற்றால் மக்களில் ஒருவரையே தேர்ந்தெடுத்து அவரே முதல்வராகலாம் என கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராதா ரவி தன் நிர்வாகிகளிடம் சொல்லிவிடுகிறார்.


முடிவில் ரவிமரியா மருத்துவனையில் குணமடைந்து வந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாரா? இறுதியில் உள்ளே வெளியே கட்சி வெற்றி பெற்று மக்களில் ஒருவராக யாரை முதல்வர் ஆக்கினார் ராதா ரவி என்பதுதான் ‘மக்கள் தலைவா' படத்தின் மீதிக்கதை.



கதையின் நாயகனாக தமிழ்க்குடிமகன் என்கிற அரசியல்வாதியாக நடித்திருக்கும் ரவிமரியா இயல்பான நடிப்பில் மக்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டு போடுவதற்காக இவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும், அறிவிக்கும் திட்டங்களும் ரசிக்கும்படியான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .


முக்கிய கதாபாத்திரத்தில் தொழிலதிபராக நடித்திருக்கும் ராதாரவி அனுபவ நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக நிற்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் நாயகி அக்க்ஷரா விஜய், முதலமைச்சராக வரும் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் , அமைச்சராக வரும் பழ. கருப்பையா , அரசியல்வாதியாக வரும் நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு , இயக்குனர் ராம் தேவ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் துளசி ராமன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.


ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.


தமிழக அரசியல் களத்தை மையமாக கொண்ட கதையுடன் அரசியல் செல்வாக்குமிக்க தொழில் அதிபர்களின் பலம் ,

மக்கள் மனநிலை அறிந்து இலவச திட்டங்கள் , தகுதியற்ற அரசியல்வாதிகள் என ஆரம்பம் முதல் இறுதி வரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும் இன்றைய சூழ்நிலைகேற்ற அரசியல் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம் தேவ்


மொத்தத்தில் 'மக்கள் தலைவா' அரசியல் சாணக்கியன்


ரேட்டிங் : 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page