MediaTalks Logo
Header Advertisement
reviews
21 June 2026 at 00:01•1 Views

‘பாலன் – தி பாய்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘பாலன் – தி பாய்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

வெங்கட் கே. நாராயணா (K.V.N. புரொடக்ஷன்ஸ்) & ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் ஃபிலிம்ஸ்) தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில்  ‘பாலன் – தி பாய்’.

ஃபர்ஸானா பலதிங்கல், ஆதிஷேஷன் K.R., ஜினன் , ஜீன் பால் லால், கிரிஷ் A.D. ஆகியோர் நடித்துள்ளனர்

நிறைமாத கர்ப்பிணியான நாயகி ஃபர்ஸானா பலதிங்கல் கணவனின் கொடுமைகளை தாங்க முடியாமல் கணவனை கொலை செய்த குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார்.

சிறையில் தண்டனை அனுபவிக்கும் நேரத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார்.

சில வருடங்களுக்கு பிறகு தண்டனை முடிந்து சிறையில் தன் மகனுடன் விடுதலையாகிறார் .

சிறையில் இருந்து வெளியே வரும் ஃபர்ஸானா பலதிங்கல் யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து பல இடங்களில் வேலை செய்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் பேருந்து நிலையத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்ய போகும் போது அந்த பெண்ணிடம் இருக்கும் அடையாள அட்டையை பயன்படுத்தி வயதான பாட்டியை பார்த்து கொள்ளும் வேலைக்காக அங்கு செல்கிறார்.

இந்நிலையில் பெரிய வீட்டில் இருவரும் தங்கி தனிமையில் இருக்கும் வயதான பாட்டியை கவனித்துக்கொண்டு அங்கிருக்கும் பள்ளியில் மகனை சேர்த்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்த அந்த பாலியல் தொழில் செய்யும் பெண் பர்ஸானாபலதிங்கலை கண்டுபிடித்து தன் தொழிலுக்கு அழைத்து செல்ல அவரது வீட்டிற்கு வந்து விடுகிறார்.

இச் சுழலில் அந்தப் பாட்டியின் மகனும் வெளிநாட்டிலிருந்து தன் குடும்பத்துடன் வந்து விடுகிறார்.

இதே சமயம் பள்ளி முடிந்து பஸ்ஸில் வரும் மகனை எப்போதும் அழைத்து வரும் ஃபர்ஸானா பலதிங்கல், மகனிடம் எவ்வளவு நேரம் ஆனாலும் தான் வரும்வரை அதே இடத்தில் காத்திருக்க வேண்டும் கூறுகிறார்.. பாலியல் தொழில் செய்யும் பெண்ணாலும் ,வெளிநாட்டிலிருந்து தன் குடும்பத்துடன் வரும் பாட்டியின் மகனாலும் தன் மகனை அழைத்து வர முடியாத சூழ்நிலை ஃபர்ஸானா பலதிங்கலுக்கு ஏற்படுகிறது.

ஃபர்ஸானா பலதிங்கல் சொன்னதால் பல மணிநேரம் காத்திருக்கும் சிறுவனை போலீஸ் மீட்டுக் கொண்டு போய் சிறை சாலையில் வைத்து தாய் குறித்து விசாரிக்கிறார்கள். அதற்கு மகன் பதில் அளிக்காமல் அமைதியாக நிற்கிறான்.அதே சமயம் காவல் நிலையத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி விடுகிறான் அந்த சிறுவன் .

சில வருடங்களுக்கு பிறகு பெரியவனான பின் தன் தாய் ஃபர்ஸானா பலதிங்கலை கண்டுபிடிக்க சிறுவனாக இருந்தபோது தப்பி ச் சென்ற காவல் நிலையத்திற்கு மீண்டும் வருகிறான்

இறுதியில் போலீஸ் உதவியுடன் தன் தாய் ஃபர்ஸானா பலதிங்கலை கண்டுபிடித்தானா ?

தாய் – மகன் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா? என்பதுதான் ‘பாலன் – தி பாய்’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக தாய் கதாபாத்திரத்தில் அமைதியாக நடித்திருக்கும் ஃபர்ஸானா பலதிங்கல், ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாலே பாசம், தவிப்பு, போராட்ட குணம் என அனைத்திலும் உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதையின் திருப்பமாக திருடனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸ் படத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் ரசிகர் மனதை கவர்கிறார் .

போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் ஜீன் பால் லால், இளம் சிறுவனாக வரும் ஆதிஷேஷன் K.R. வயது வந்த சிறுவனாக வரும் ஜினன், கிரிஷ் ஏ.டி ,வயதான பாட்டி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையும், ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.

இயல்பான ஒரு தாய் -மகனின் பாசமான கதையுடன் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இத்திரைப்படத்திலும் தனது முத்திரையை மிக ஆழமாகப் பதிவு செய்து திறமையான இயக்கத்தில் அனைவரும் ரசிக்கும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிதம்பரம்

மொத்தத்தில் ‘பாலன் – தி பாய்’ – நேர்த்தியான நல்ல படங்களில் ஓன்று

ரேட்டிங் : 3 .3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: