MediaTalks Logo
Header Advertisement
reviews
25 June 2026 at 11:49•1 Views

‘அனந்தன் காடு’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘அனந்தன் காடு’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர்  ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில்  ‘அனந்தன் காடு’

ஆர்யா , நிகிலா விமல்,முரளி கோபி ,ரெஜினா கசாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ் , சித்திக், அஜய்,போஸ் வெங்கட், தேவ் மோகன் , ரென்ஜி பணிக்கர், அஞ்சலி பி. நாயர், சாந்தி பாலச்சந்திரன், அச்யுத்குமார், சரத் அப்பானி, விஜயராகவன்  ஆகியோர் நடித்துள்ளனர்

1989-ல் இலங்கையில் நடைபெறும் போரில் தமிழீழ போராளியான ஆர்யா இலங்கை ராணுவத்தால் தன் குடும்பத்தை இழந்து விடுகிறார்.

அதன் பின் போஸ் வெங்கட்டின் உதவியால் கேரளா செல்கிறார்.

இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் விஜயராகவன் மாவட்ட ஐ ஜி சுனிலின் உதவியுடன் கூலிப்படை கும்பலான முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோரை வைத்து தனக்கு எதிராக செயல்படும் ஆட்களை கொலை செய்கிறார். அந்த கூலிப்படை கும்பலில் ஆர்யா போய் சேர்கிறார்.

அந்தக் கூலிப்படைக்கு முதலமைச்சர் விஜயராகவன் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அச்யூத் குமாரை கொலை செய்யும் வேலையைக் கொடுக்கிறார். கூலிப்படை கும்பலுடன் அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார்.

இந்த கொலை வழக்கு சிபிஐ வரை செல்கிறது. கூலிப்படையினர் பிடிபட்டால் தன்னை பற்றி அனைவருக்கு தெரிய வரும் என்று எண்ணும் முதல்வர் விஜயராகவன் கூலிப்படையினர் அனைவரையும் போலீசை வைத்து என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்.

இச் சுழலில் முதல்வரின் சதியை தெரிந்து கொண்டதும் முதல்வரின் பேரனை கூலிப்படையினர் கடத்தி முதல்வருக்கு சில கோரிக்கைகளை வைக்கின்றனர் .

இறுதியில் கூலிப்படையினர் முதல்வருக்கு என்ன கோரிக்கைகளை வைத்தனர் ?

போலீசாரின் என்கவுண்டரில் இருந்து கூலிப்படையினரை ஆர்யா காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் ‘அனந்தன் காடு’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா தமிழீழ போராளியாக இயல்பான நடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் , செண்டிமெண்ட் என உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கூலிப் படையினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்கள் .

காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், கேரள முதல்வராக நடித்திருக்கும் விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார்,போஸ் வெங்கட் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு தரமாக உள்ளது .

இலங்கை ராணுவத்தின் அட்டுழியத்தால் குடும்பத்தை இழக்கும் ஒருவரது கதையை மையமாக வைத்து கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்துடன் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் சூழ்ச்சியான அரசியல் ஆட்டத்தை அழுத்தமாக பதிவு செய்து அனைவரும் ரசிக்கும் வகையில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார்

மொத்தத்தில் ‘அனந்தன் காடு’ – சதி நிறைந்த அரசியல் ஆட்டம்

ரேட்டிங் : 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: