MediaTalks Logo
Header Advertisement
reviews
27 June 2026 at 10:26•1 Views

‘கான் சிட்டி’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘கான் சிட்டி’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான் சிட்டி’

அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, நந்தகோபால், VTV கணேஷ், ராதா ரவி ஆகியோர் நடித்துள்ளனர் .

2010ம்  ஆண்டு நடைபெறும் கதையாக,, மின் வாரிய ஊழியரான நாயகன் அர்ஜுன் தாஸ்  சென்னை , மங்களாபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் நிலையில்  பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்.

இந்நிலையில்  அலுவலகத்தில் மின்சாரத்திற்கு பணம் செலுத்த வருபவர்களிடம் போலியான ரசீதை  கொடுத்து மோசடி செய்கிறார்.

மற்றொரு பக்கம் வீட்டை லீசுக்கு எடுத்து வாழ்ந்து வரும் கர்ப்பிணியான அன்னா பென் சில நாட்களிலேயே தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்கிறார்.

தன்னை மற்றொருவன் ஏமாற்றியதை போல அன்னா பென்னும்   போலி அலுவலக பெயரில் பலரிடம் லீஸ் மற்றும் வாடகைக்கு வீட்டை விடுவதாக கூறி பண மோசடி செய்கிறார்.

இச் சுழலில் வடிவுக்கரசியின் மகனான யோகிபாபு அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாய் தேவைப்பட பலரிடம் கேட்டும் யாரும் பணம் கொடுக்க முன் வராததால் டிரஸ்ட் ஒன்றை நடத்துவதாக கூறி பல லட்ச ரூபாயை பெற்று மோசடி செய்கிறார்.

அர்ஜுன் தாஸ், அன்னா பென் மற்றும் வடிவுக்கரசியும், அவரது மகனான யோகி பாபு ஆகியோர் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நிலையில் அவர்களது நிலையை மாற்றுவதற்காக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மோசடி மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள்.

இதனையடுத்து அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் மோசடி செய்து சேர்த்து வைத்த பணத்தை அர்ஜுன் தாஸிடம் கொடுக்கிறார்கள். அர்ஜுன் தாஸின் நண்பருக்கு அவசர தேவை என்பதற்காக 10 கோடி ரூபாயை கொடுக்க அவரது நண்பர் திடீர் என மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்.

இதனையடுத்து அர்ஜுன்தாஸ் ,அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோரை போலீஸ் கைது செய்ய அவர்களிடம் இருந்து தப்பி மங்களூர் செல்கிறார்கள். அனைவரும் அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இதற்கிடையே அவர்கள் இருக்கும் இடத்தை கண்டிபிடிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்.

இதே சமயம் அன்னா பென்னின் மகனை பள்ளியில் இருந்து ஒரு நபரால் கடத்தப்படுகிறார் .

பள்ளியில் சிசிடிவி காட்சிகளை ஆராயும்போது அன்னா பென்னின் மகனை  ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் கடத்தியதை  அர்ஜுன்தாஸ் ,தெரிந்து கொள்கிறார் .

அன்னா பென்னின் மகனை  மீட்க சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபாலை சந்திக்கும் அனைவரும் அவரது மிரட்டலுக்கு பயந்து  பெரும் மோசடி மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள்.

இறுதியில்  அர்ஜுன் தாஸ் அன்னா பென்னின் மகனை காப்பாற்றினாரா ?

மோசடி மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க அவர்கள் போட்ட திட்டம் என்ன ?

அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா ? இல்லையா ?, என்பதை சொல்லும் படம்தான் ‘கான் சிட்டி’.

சரவணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன்தாஸ் அமைதியான நடிப்பில் மோசடி பேர்வழியாக  பணம் சம்பாதிக்க போடும் திட்டம் ,காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

மித்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா பென் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளார் .

யோகி பாபு, வடிவுக்கரசி  இருவருடைய நடிப்பில் சில காட்சிகளில் மட்டும் காமெடி ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.

சிறுவனாக வரும்  அகிலன், இன்ஸ்பெக்டராக வரும் நந்தகோபால், VTV கணேஷ், ராதா ரவி ,அருள் தாஸ் ,ஷாஜி சென் ,தம்பி ராமையா,ரமேஷ் திலக்,பரத்வாஜ் ரங்கன் ,இமான் அண்ணாச்சி,பொன்வண்ணன் ,ராகு எசக்கி,சதானந்த் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் விதத்தில் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு பக்க பலமாக உள்ளது.

மோசடி செய்யும் நபர்களின் கதையை மையமாக வைத்து  விறு விறுப்பான திரைக்கதையில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதை அழுத்தமாக சொல்வதுடன் முழு நீள காமெடி கலந்த குடும்ப படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் .

மொத்தத்தில் –  ‘கான் சிட்டி ’ –  ஏமாற்றாதே … ஏமாறாதே

ரேட்டிங் : 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: