top of page

‘சிங் கீதம்’- விமர்சனம்

  • mediatalks001
  • 1 hour ago
  • 2 min read

சொப்னா சினிமா மற்றும் வைஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் நாக் அஸ்வின்  தயாரிப்பில் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில்  ‘சிங் கீதம்’


அஹல்யா பம்ரூ, அயான், ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன் , சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி, சிறப்புத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா  ஆகியோர்நடித்துள்ளனர் .


சிறையில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் நாயகன் அயானுக்கு அவரது தந்தை  ராகுல் ரவீந்திரன் எழுதி வைத்த உயிலின் முலம் குடும்ப சொத்தின் பத்திரம் கிடைக்கிறது.


குபேரபுரம் என்ற அந்த ஊரில் அவரது குடும்பத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் இருப்பது அயானுக்கு தெரிய வருகிறது.


குபேரபுரத்தில் அதிகளவு தங்கம் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஷாலினி கொண்டெபுடியும் அவரது அப்பாவும் வெளிநாட்டு வியாபாரி ஒருவருக்கு அந்நிலத்தை பல கோடி ரூபாய்க்கு விற்க நினைக்கிறார்கள்.


இந்நிலையில் அந்த ஊருக்கு அயான் சென்றதும் தோண்டப்பட்டு இருக்கும் இரண்டு தங்க சுரங்கங்களை நம்பி ஊர் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதும், அந்த தங்க சுரங்கத்தின் மற்றொரு உரிமையாளர் தனது தந்தை  ராகுல் ரவீந்திரன் என்பதை தெரிந்துக் கொள்கிறார்.


வெளிநாட்டு வியாபாரிக்கு நிலத்தை பல கோடி ரூபாய்க்கு விற்க ஷாலினி கொண்டெபுடியும் அவரது அப்பாவும் முயற்சிக்கும்போது அங்கு வரும் நாயகன் அயான் நிலத்தின் உண்மையான உரிமையாளர் என்பதால் விற்பதில் பாதி பங்கு கேட்கிறார்.


பாலைவனம் போல காட்சியளிக்கும் அந்த பகுதியில் உள்ள நிலத்தில் ஒரேயொரு ஆலமரம் மட்டுமே இருக்கிறது. அந்த மரத்தை வெட்டிவிட்டு தோண்டினால் தங்கம் கிடைக்கும் என அனைவரும் முடிவெடுக்கும் நேரத்தில் நாயகி அஹல்யா பம்ரூ அந்த ஒற்றை மரத்தை தாய்போல. நினைப்பதால் அதை வெட்ட கூடாது என்று போராடுகிறார்.


நாயகி அஹல்யா பம்ரூவின் போராட்டத்தை மீறி ஊர் மக்களால் மரம் வெட்டப்படுகிறது.


மரம் வெட்டிய பிறகு அந்த ஊரில் உள்ள அனைவரும் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை கூட பாடலாக பாடும் விநோதமான பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள்.


மக்கள் அனைவரும் பேசுவதற்கு பதில் பாடுகிறார்கள். அவர்களால் பேசவே முடிவதில்லை. ஊரை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.


மக்கள் மட்டும் அல்ல, அந்த ஊரில் இருக்கும் கோழி கூட அதிகாலை கூவலை சங்கீத பாணியில் பாடலாய் வெளிப்படுத்துகிறது. தாங்கள் பேசும் சாதாரண வார்த்தைகளை கூட பாடலாக பாடுவதை, குபேர கடவுளின் கொடுத்த சாபமாக மக்கள் நினைக்கின்றனர் .


முடிவில் குபேரபுரம் மக்கள் குபேர கடவுளின் சாபத்தில் இருந்து மீண்டு வந்தார்களா ? ஊரில் பேசும் வார்த்தைகளை பாடலாக பாடிய மக்கள் இறுதியில் இயல்பாக பேசினார்களா ? இல்லையா ? என்பதுதான் ‘சிங் கீதம்’ படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் அயான் இளமை துள்ளும் துடி துடிப்புள்ள இளைஞனாக இயல்பான நடிப்பில் நாயகியுடனான அழகிய காதல் , தவிப்பு , இரக்கம், என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் அஹல்யா பம்ரூ சுறு சுறுப்பாக துறுதுறு நடிப்பில் இயற்கையையும் , மரங்களையும் காப்பாற்ற போராடும் கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி, அழகாக இருப்பதோடு அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார்.


நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் அப்பாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் விஜய் தேவரகொண்டா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வு.


படத்தின் மற்றொரு பலமாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களுடன் பின்னணி இசை பிரமாதம் .


ஒளிப்பதிவாளர் அங்கூர்.சி ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.


புதுமையான முயற்சியில் வித்தியாசமான கதை களத்துடன் இயற்கை வளங்களை பாதுகாப்பதை மைய கருவாக வைத்து விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் இயல்பான மக்களின் அழகிய வாழ்வியலுடன் ராஜ பார்வை , அபூர்வ சகோதரர்கள் ,மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம், மகளிர் மட்டும் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது 94 வயதில் கதையோடு பயணிக்கும் இசையுடன் அனைவரும் ரசிக்கும் வகையில் திரைப்படத்தை பாராட்டும்படி இயக்கியுள்ளார் .


மொத்தத்தில் ‘சிங் கீதம்’ – சங்கீதமான கதைக் களத்தில் ஒரு புதுமை


ரேட்டிங் : 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page