‘முதற்கனல்’ - விமர்சனம்
- mediatalks001
- 11 hours ago
- 2 min read

தயாரிப்பாளர் ஆர்.போத்திராஜ் தயாரிப்பில் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன் இயக்கத்தில் ‘முதற்கனல்’
அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ்,, ஆர்.வெங்கடரமணன், டி.ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .
காஞ்சிபுரத்தில் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் திறமைமிக்க மாணவனான நாயகன் அஸ்வின் விஸ்வநாதன் அப்பா, அம்மா மற்றும் தங்கை என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் ..
நாயகன் அஸ்வின்விஸ்வநாதன் பள்ளி படிப்பில் அனைத்து பாடங்களிலும் முதல் மாணவனாக இருப்பதோடு மருத்துவராகி அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சிய கனவுடன் படித்து வருகிறார்.
இச் சுழலில் அஸ்வின் விஸ்வநாதன் அப்பா ராமசாமி வருடந்தோறும் தன் ஊருக்கு சென்று ஒரு நாள் தன்னுடன் படித்த நண்பர்களை பார்த்து பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .
இந்த முறை ராமசாமி தன்னுடன் அஸ்வின் விஸ்வநாதனை அழைத்துச் செல்ல அங்கு தன்னுடன் படித்த தோழியின் மகன் ராஜேஷுடன் அஸ்வின் விஸ்வநாதனுக்கு நட்பு ஏற்படுகிறது.
அங்கு போதை பொருட்களை உபயோகிக்கும் ராஜேஷ் பள்ளிக்கு செல்லாமல் எப்பொழுதும் போதையில் மிதக்கிறார் .
ஒரு கட்டத்தில் ராஜேஷுன் நட்பினால் பள்ளியில் முதல் மாணவனாக திகழும் அஸ்வின் விஸ்வநாதன் போதை மயக்கத்துக்கு அடிமையாகிறார் .
இதையடுத்து அஸ்வின் விஸ்வநாதன்பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை திருடி போதை பொருட்கள் வாங்கி பயன்படுத்துகிறார்.
இதனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இந்நேரத்தில் போதை பொருள் உபயோகிப்பது பெற்றோருக்கு தெரிய வர அஸ்வின் விஸ்வநாதன் ஊரை விட்டு ஓடி போகிறார்.
இதே சமயம் பக்கத்து வீட்டில் பணத்தை திருடி விட்டு ஊரை விட்டு ஓடி வரும் ராஜேஷை அஸ்வின்விஸ்வநாதன் சந்திக்க இருவரும் சென்னைக்கு வந்து
கோயம்பேட்டில் வேலை செய்து அதில் வரும் பணத்தை வைத்து போதையில் வாழ்கின்றனர் .
அதே நேரத்தில் இவர்களை போல இருக்கும் சில போதை இளைஞர்களிடம் இருவரும் நட்பு கொள்ள ,,,, இவர்கள் அனைவரும் பணத்திற்காக ஒரு பெண்ணிடம் வழிப்பறியில் இறங்க அந்த பெண் இவர்களிடம் போராடும்போது மரணமடைகிறாள் .
இறுதியில் பெண்ணின் கொலை வழக்கில் அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ் உட்பட போதை இளைஞர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்கிறார்கள் .
முடிவில் கொலை வழக்கில் கைதான அனைவருக்கும் நீதி மன்றத்தில் நீதிபதி கொடுத்த தீர்ப்பு என்ன ?
போதை பொருள் பழக்கத்தில் இருந்து அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ் மீண்டு வந்தார்களா ? இல்லையா ? என்பதுதான் ‘முதற்கனல்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் விஸ்வநாதன் அறிமுக படம் போல இல்லாமல் இயல்பான நடிப்பில் போதை பழக்கத்திற்கு அடிமையானவராகவும், போதை பழக்கத்தை விட முடியாமல் தவிப்பது என கதையுடன் இணைந்து உணர்வுப் பூர்வமாக நடிப்பபை கொடுத்திருக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ராஜேஷ் எதார்த்த நடிப்பில் அம்மா மீது வைத்திருக்கும் பாசம், போதைக்காக பக்கத்து வீட்டில் திருடக்கூட செல்லும் குணம் கொண்ட கதாபாத்திரத்தில் கவனத்தை பெறுகிறார்.
மற்றும் தயாரிப்பாளர் ஆர்.போத்திராஜ் , வக்கீலாக வரும் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரிகரன், யோகேஷ்,டி ராஜேந்திரன் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் மீரா லால் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் கதையோடு பயணிக்கிறது .
ஒளிப்பதிவாளர் கந்தசுவாமி கோபால் ஒளிப்பதிவு காட்சிகளோடு நம்மை பயணிக்க வைக்கிறது.
இன்றைய இளைய தலைமுறை போதை கலாசாரத்துக்கு அடிமையாவதை அடிப்படையாக கொண்ட கதையுடன் பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை எப்படி கண்காணிக்க வேண்டும் என்ற கருத்தை சொல்வதுடன் ,போதை பொருள் பழக்கத்தால் மாணவர்களின் வாழ்க்கை எந்த நிலைக்கு செல்கிறது என்கிற சமுக விழிப்புணர்வை அழுத்தமாக பதிவு செய்து சமூக நலனில் அக்கறை கொண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன்
மொத்தத்தில் ‘முதற்கனல்’ – சமூக விழிப்புணர்வு
ரேட்டிங் : 3 / 5





Comments