top of page

“ஏன் என்னை ஏதோ செய்து விட்டாய்” - விமர்சனம்

  • mediatalks001
  • 11 hours ago
  • 2 min read

நாயகன் ஆண்டனி சிறுவயதில் தாயை இழந்து குடிபழக்கத்துக்கு அடிமையான தந்தை ஜீவா ரவியிடம் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் .


இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து வரும் ஆண்டனிக்கு நெருங்கிய நண்பர்களாக ரெஜின் போஸும், ஆலம் ஷாவும் இருக்கின்றனர்.

இச்சூழலில் வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் புகை ,குடி பழக்கத்துடன் , பெண்களுடன் உல்லாசமாக இருப்பது என அனைத்து பழக்கங்களுடன் வாழ்ந்து வரும் ஆண்டனி விபச்சார அழகியான மதுமிதா தாஸை ஒரு இரவு நேரத்தில் வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருக்கிறார்.


மதுமிதா தாஸின் இயல்பான குணமும், தன்மையான பேச்சும் ஆண்டனிக்கு பிடித்துப் போக இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருக்கின்றனர்


ஒரு கட்டத்தில் மதுமிதா தாஸின் அன்பான பாசத்தில் மயங்கும் ஆண்டனி அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் . மதுமிதா தாஸும் அவரது அரவணைப்பை புரிந்து கொண்டு ஆண்டனியை காதலிக்கிறார்.


இருவரும் காதலர்களாக இருக்கும் நிலையில் மதுமிதா தாஸை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் ஆண்டனி


ஆண்டனியின் விளையாட்டுத்தனத்துடன் , நண்பர்களுடன் நடந்து கொள்ளும் சில செயல்களால் மதுமிதா தாஸுக்கும் ஆண்டனிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.


பிரச்சனை பெரிதாகி இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு காதலர்கள் பிரியும் சூழ்நிலை உருவாகிறது.


மனமுடைந்த ஆண்டனி மதுமிதா தாஸுடன் வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியாமல் தவிக்கும் நேரத்தில் நண்பர் ரெஜின் போஸ் ஒரு பூங்காவில் இருக்கும் மதுமிதா தாஸை சந்திக்கும் நிலையில் ஆண்டனியின் நிலைமையை விளக்கி அவரை சந்திக்குமாறு வற்புறுத்துகிறார்.


ரெஜின் போஸின் வற்புறுத்தலால் மதுமிதா தாஸ் ஆண்டனியை மீண்டும் சந்திக்க பூங்காவுக்கு செல்கிறார் .


இறுதியில் ஆண்டனி மதுமிதா தாஸை சந்தித்தாரா ? பிரிந்து வாழ்ந்த காதலர்கள் மீண்டும் இணைந்தார்களா ? முடிவில் மதுமிதா தாஸுன் நிலை என்ன ? என்பதுதான் “ஏன் என்னை ஏதோ செய்து விட்டாய்” படத்தின் மீதி கதை.


திரைப்படத்தை தயாரித்து இயக்குனராக இயக்கியிருப்பதுடன் எடிட்டிங் பணி செய்து நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி இயல்பான நடிப்பில் காதல் , தவிப்பு , ஏக்கம் என உடல் மொழியில் நண்பர்களுடன் சகஜமாக பழகுவது , காதலி மீது அன்பை வெளிப்படுத்துவது என் தேர்ந்த நடிகராக உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .


முக்கிய கதாபத்திரத்தில் நாயகியாக நடிக்கும் மதுமிதா தாஸ் கதையுடன் இணைந்து இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .


தந்தையாக நடித்துள்ள ஜீவா ரவி ,நண்பர்களாக நடிக்கும் ரெஜின் போஸ் , ஆலம் ஷா, நவ்யா சுஜி என படத்தில் நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பில் நடித்துள்ளனர் .


இசையமைப்பாளர் ஜெய்கார் ஹரிநாத், அசோக் ஸ்ரீதரன் , இசையில் பாடல்களும் , ஜாய் ரீடாவின் பின்னணி இசையும் , ஒளிப்பதிவாளர் பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


தாய் பாசம் தெரியாத தந்தையின் அரவணைப்பும் அறியாமல் வாழ்ந்து வரும் நாயகனின் கதையை மையமாக வைத்து இயல்பான விறு விறுப்பு கலந்த திரைக்கதை அமைப்பில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சிகளை அமைத்து நட்பு ,காதல், பாசம் ,செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களுடன் காட்சிகளில் ஆபாசம் இல்லாமல்நாயகனாக நடித்து திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் இயக்குநர் D ஆண்டனி .


மொத்தத்தில் “ஏன் என்னை ஏதோ செய்து விட்டாய்” மனதை கலங்க வைக்கும் காதல்


ரேட்டிங் - 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page