'இம்மார்டல் ' (immortal) - விமர்சனம்
- mediatalks001
- 57 minutes ago
- 2 min read

ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கும் கதையாக பழங்காலத்தில் கணவன் -மனைவியாக இருந்த பழங்குடி இன தம்பதியினரில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கு குழந்தை பிறக்கும் நிலையில், அவர்களுக்கு மனிதக் குழந்தைக்கு பதில் வவ்வால் போன்ற முகமுடைய மர்மமான ஒரு உயிரினம் பிறக்கிறது.
அதன் பிறகு தற்போதைய கால கட்டத்தில் நடைபெறும் கதையாக …
லொள்ளு சபா மாறனின் சகோதரியின் மகனான ஜி.வி. பிரகாஷ் குமார் அவர் நடத்தும் ஆப்செட் பிரிண்டிங்கில் DTP டிசைனராக வேலை செய்கிறார் .
அவர் தனியாக தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய தொடர்ந்து தொல்லை தருவதால் குறைந்த வாடகையில் தங்குவதற்கு ஒரு இடத்தைத் தேட எங்கும் வீடு கிடைக்காமல் திண்டாடுகிறார் .
இந்நிலையில் திடீரென வரும் போனில் யாரென்று தெரியாத கயாடு லோஹர் தான் வசிக்கும் ஆடம்பரமான அபார்ட்மெண்டில் குறைந்த வாடகையில் தங்குவதற்கு இடம் இருக்கிறது வந்து பாருங்கள் என
ஜி.வி. பிரகாஷ் குமாரை அழைக்க கயாடு லோஹரின் அழகில் மயங்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் உடனடியாக அந்த வீட்டில் தங்குகிறார்.
அவரது அழகை ரசித்தபடி கயாடு லோஹருடன் பழக தொடங்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் அவரை காதலிக்க ஆரம்பிக்க கயாடு லோஹரும் ஜி.வி. பிரகாஷ் குமாரை காதலிக்க தொடங்க ஒரே வீட்டில் இருவரும் காதலர்களாக காதலிக்கின்றனர் .
இச் சுழலில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு தெரியாமல் அதே வீட்டில் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இருக்க அவரை கயாடு லோஹர் தன் தாத்தா என சொல்கிறார் .
சந்தேகமடையும் ஜி.வி. பிரகாஷ் குமார் அவரை விசாரிக்கும்போது அவர் சொல்லும் தகவல்களால் அதிர்ச்சியடைகிறார் .
அதே சமயம் அந்த அபார்ட்மெண்டை விட்டு தப்பிக்க போராடும்போது அந்த இடத்தை விட்டு தப்பிக்க முடியாமல் திகில் கலந்த பயத்துடன் கயாடு லோஹரை பார்க்க வீட்டிற்க்குள் செல்கிறார் .
இறுதியில் யார் இந்த மர்மமான கயாடு லோஹர் அவரது மர்ம பின்னணி என்ன ? உண்மையில் அவர் பெண்தானா ? போராடும் ஜி.வி. பிரகாஷ் குமார் அந்த அபார்ட்மெண்டை விட்டு தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் 'இம்மார்டல் ' (immortal) படத்தின் மீதி கதை .
நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் இயல்பான நடிப்பில் காதல் நாயகனாகவும் ,காதலி யார் என தெரிந்தவுடன் திகிலான பயம் கலந்த உணர்வுகளை உள்வாங்கி உடல் மொழியில் பாராட்டும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .
முக்கிய கதாபத்திரத்தில் நாயகியாக நடிக்கும் அழகான கயாடு லோஹர் கதையுடன் இணைந்து கவர்ச்சியான உடையில் இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .
T M கார்த்திக் ,குமார் நடராசன் ,லொள்ளு சபா மாறன் ,ஆதித்யா கதிர், என படத்தில் நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பில் நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் , ஒளிப்பதிவாளர் அருண் ராதா கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு அழகான பெண்ணின் வீட்டில் தங்கும் நாயகனின் கதையை மையமாக வைத்து விறு விறுப்பு கலந்த திரைக்கதை அமைப்பில் மென்மையான காதலுடன் முற்றிலும் மாறுபட்ட ஃபாண்டஸி, ஹாரர், மர்மம் மற்றும் சர்வைவல் த்ரில்லருடன் புதுமையான கதைகளத்தில் அனைவரும் ரசிக்கும்படி ஹாலிவுட் பட பாணியில் பாராட்டும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மாரியப்பன் சின்னா .
மொத்தத்தில் 'இம்மார்டல் ' (immortal) ஆங்கில படத்திற்கு நிகரான ரசிக்க வைக்கும் படம் .
ரேட்டிங் - 3.5 / 5





Comments