top of page

‘ஐ அம் கேம்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 16 hours ago
  • 2 min read

தொழில் அதிபரின் மகனான நாயகன் துல்கர் சல்மான் தனது நிறுவனத்தை சரியாக கவனிக்காமல்  சூதாட்டங்கள் விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறார் .


நாயகன் துல்கர் சல்மான் சூதாட்டங்களில் தோற்று பணத்தை இழந்து விடுவதால் பெரும் கடனாளியாகி விடுகிறார்.


கடன் கொடுத்தவர்கள் நாள் கெடு வைத்து அவரை மிரட்டி பணத்தை வசூலிக்க முயற்சி செய்கின்றனர் .


துல்கர் சல்மானின் அம்மாவான ஜெயசுதா கடன் பிரச்சனையை சமாளிக்க தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து உதவுகிறார் .


இக்கட்டான சுழலில் மேலும் பணத்தை திரட்டி கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வர கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்,


ஆனால் அதிலும் தோல்வியடைந்து மொத்த பணத்தையும் இழந்து விடுகிறார்.

அங்கிருப்பவர்களை மிரட்டி தான் விட்ட பணத்தை எடுத்து கொண்டு தப்பித்து செல்லும்போது அவர்கள் பின்தொடர்ந்து துல்கர் சல்மானை துரத்தும்போது விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடையும் துல்கர் சல்மானின் ஒரு வலது கை சிதைந்து விடுகிறது.


இதனால் மருத்துவ வளர்ச்சியில் இறந்த ஒருவரது கை அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.


சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்ளும் துல்கர் சல்மானின் வாழ்க்கையில் அவருக்கு பொருத்தப்பட்ட புதிய கை அவரை மீறி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


தான் சொல்வதை கேட்காமல் அந்த கை தன்னை மீறி பல விசயங்களை செய்தாலும், அதன் மூலம் சூதாட்டங்களில் தொடர் வெற்றிகளை குவிக்கும் துல்கர் சல்மான், தன் புதிய கை தனக்கான அதிர்ஷ்டம் என்று நம்பும் போது, அந்த கை தொழிலதிபரும், மெட்ராஸ் கிரிக்கெட் அணியின் நிதியுதவியாளருமான மிஷ்கினை கொலை செய்ய முயற்சிக்கிறது.


இதனால் அதிர்ச்சியடையும் துல்கர் சல்மான் இந்த கை தனக்கான அதிர்ஷ்டம் இல்லை, தன்னை மிக பெரிய பிரச்சனையில் சிக்க வைக்க வந்த ஆபத்து என்பதை துல்கர் சல்மான் உணர்கிறார்.


ஒரு கட்டத்தில் துல்கர் சல்மானின் மீதே அந்த கை கொலைவெறி தாக்குதல் நடத்துகிறது.


இறுதியில் யாருடைய கை தனக்கு பொருத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள மருத்துவத்தில் தனக்கு துணையாய் இருந்த கயாடு லோஹருடன் இறந்து போன நபரின் காதலியான சம்யுக்தா விஸ்வநாதனை இருவரும் சந்திக்கின்றனர் .


இறுதியில் தனக்கு பொருத்தப்பட்டது யாருடைய கை என்பதை துல்கர் சல்மான் கண்டுபிடித்தாரா ? எதற்காக அந்த கை மிஷ்கினை கொலை வெறியுடன் தாக்க முயற்சிக்கிறது? அதன் மர்ம பின்னணி என்ன ? என்பதுதான் ’ஐ அம் கேம்’ படத்தின் மீதி கதை .


நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் மிக இயல்பான நடிப்பில் கை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தன் உடலோடு பொருந்தியிருந்தாலும் தன் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் கையை வைத்துக் கொண்டு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை திறமையான தன் நடிப்பு மூலம் சிறப்பாக கையாண்டு ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார் .


நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர் அழுத்தமான கதாபாத்திரத்தில் எதார்த்த நடிப்பில் அமைதியாக நடிக்கிறார்


டேவிட் ஆபிரஹாம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிஷ்கின் சூதாட்ட உலகின் நாயகனாக ஆக்ரோஷமான நடிப்பில் வில்லனாக மிரட்டுகிறார் .


முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .


ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் ,ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித்தின் வண்ணமயமான , பிரம்மாண்ட ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


சூதாட்டத்தின் ஆர்வத்தில் பணத்தை இழக்கும் நாயகனின் கதையை மையமாக வைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் சஸ்பென்ஸ், திரில்லர், ஆக்‌ஷன், காதல் என ஆரம்பம் முதல் இறுதி வரை விறு விறுப்புடன் சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் சூதாட்டத்தை தோலுரிப்பதுடன் பழிவாங்கும் கதையை வழக்கமான பாணியில் சொல்லாமல் புதுமையான கதைக்களத்துடன் அனைவரும் ரசிக்கும் வித்தியாசமான ஆக்ஷன் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்


மொத்தத்தில் ‘ஐ அம் கேம்’ மக்கள் எதிர்பார்க்காத பழி வாங்கும் கதை


ரேட்டிங் - 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page