‘தி டார்க் ஹெவன்’ - விமர்சனம்

2004ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறும் கதையாக மலை கிராமமான தமிழ்நாட்டின் கேரள எல்லை பகுதியில் இருக்கும் மேக்கரை கிராமத்தில்
ஏழு வருடங்களுக்கு ஒரு முறை, ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதத்தில் மர்மமான முறையில் ஆண்கள் இறக்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படும் ஒரு பிரச்சனையில் வன மங்கையின் சாபத்தால் தான் இப்படிப்பட்ட அசம்பாவிதம் நடப்பதாக கிராம மக்கள் அனைவரும் வன மங்கைக்காக பல பூஜைகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் பதட்டமான பயத்தில் இருக்கும் சமயத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஜூன் மாதத்தின் முதல் தேதியில், அந்த ஊர் காவல்நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக பணியில் சேருவதற்கு நாயகன் சித்து தனது மனைவி தர்ஷிகா மற்றும் கைக்குழந்தையுடன் அந்த கிராமத்துக்கு வருகிறார்.
இதற்கு முன் அந்த கிராமத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரித்விகாவின் கணவர் திடீரென மர்மான முறையில் இறக்கிறார் .
ஒரு கட்டத்தில் கிராம நாட்டமையான வேல ராமமூர்த்தி காலம் காலமாக நடந்து வரும் வன மங்கையின் சாபத்தை பற்றி இன்ஸ்பெக்டரான சித்துவிடம் சொல்ல பகுத்தறிவு சிந்தனை கொண்ட சித்து அதனை நம்ப மறுக்கிறார்.
.
இதற்கிடையே, அந்த கிராமத்தில் தன் காதலனை தேடி செல்லும் இளம் பெண் ஒருவர் மாயமாகி விடுகிறார்.
அந்த வழக்கு குறித்து சித்து விசாரிக்கும் போது, மாயமான பெண்ணின் தோழியும் மாயமாகி விட, இந்த மூவரும் ஒரு இடத்தில் மர்மான முறையில் கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்படுகிறார்கள்.
இந்த வழக்கின் தீவிர விசாரணையில் சித்துவுக்கு உதவியாக கான்ஸ்டபிள் பிரதீப் உடன் இருக்கிறார் .
அதே நேரத்தில், அந்த கிராமத்தில் தொடர்ந்து மர்மக் கொலைகள் நடக்கிறது .
இந்த நிலையில், கேரளா எல்லையிலிருந்து கையில் வயலினுடன் முகமுடி அணிந்த ஒரு சைக்கோ கொலையாளியும் கிராமத்தில் வலம் வருகிறான் என்ற செய்தியுடன் அவன் தான் கொலைகளை செய்கிறான் என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் பரவுகிறது
இந்த அனைத்து கொலைகளுக்கும் சைக்கோ கொலையாளி காரணம் இல்லை இந்த கொலைகளுக்கு பின்னணியில் வேறு ஒரு கொலையாளி இதே கிராமத்தில் இருக்கிறான் என்பதை நம்பும் சித்து அந்த மர்ம கொலையாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் .
மேக்கரை கிராமத்தில் தொடர்ந்து கொலைகளை செய்து வரும் அந்த மர்ம கொலையாளியை சித்து கண்டுபிடித்தாரா ?
எதற்காக , ஏன் இந்த கொலைகள் நடக்கிறது ? என்பதை எதிர்பாராத திருப்பங்களோடு திரில்லரோடு சொல்லும் படம்தான் ‘தி டார்க் ஹெவன்’.
நாயகனாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியிருக்கும் சித்து போலீஸ் இன்ஸ்பெக்டராக அழுத்தமான கதாபாத்திரத்தில் உடல் மொழியில் அமைதியாக பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி[உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
கதையின் நாயகிகளாக சித்துவின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷிகா, மலை கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் ரித்விகா, போலீஸ் கான்ஸ்டபிளாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சத்யா, சாப்ளின் பாலு என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் நடிப்பின் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் இசையும் , ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பி.கேவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
ஒரு மர்ம மலை கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அசம்பாவிதங்களை மையமாக கொண்ட கதையுடன் மர்ம புத்தகம், சைக்கோ கொலையாளி, தொடர் கொலைகள், போலீசின் விசாரணையில் திகிலான பின்னணி என எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான விறுவிறுப்புடன் அமைந்த திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும்படி சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லர் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி
மொத்தத்தில் - ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களை திகிலடைய செய்யும் விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர்
ரேட்டிங் - 3.5 / 5





Comments