‘கோல்ட் கால்’ - விமர்சனம்

I T கம்பெனிகளின் ஆதிக்கம் நிறைந்த பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் தமிழுடன் வெவ்வேறு மொழிகளை பேசும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகியோர் விற்பனையாளர்களாக பணியில் சேர நான்கு பேரும் நண்பர்களாகிறார்கள்.
விற்பனை பிரநிதிகளான இவர்களது வேலை தெரியாதவர்களுக்கு போன் செய்து பேசுவது ,முன்னறிவிப்பில்லாமல் பல தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு சென்று பொருட்களை விற்பது என வாடிக்கையாளர்களால் தினமும் அவமானப்படும் இவர்களின் விற்பனையாளர்கள் பணி கடினமானது என்றாலும், நான்கு நண்பர்களும் நட்பு, காதல், கனவுடன் மனதை தேற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
சில நேரங்களில் அவர்களது நிறுவனம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்காததால் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
இந்நிலையில் தொழிலதிபர் ஒருவரது மகன் கடத்தப்பட, அந்த கடத்தல் குற்றத்தின் பின்னணியில் நான்கு நண்பர்கள் இருப்பதாக தேடப்படும் குற்றவாளிகளாக காவல்துறை அறிவிக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த காவல்துறையும் நான்கு பேரையும் தேடும் நிலையில் தங்கள் பிரச்சனையில் இருந்து தப்பித்து கடத்தப்பட்ட சிறுவனையும் காப்பாற்ற முடிவு செய்யும் நண்பர்களான நான்கு பேரும் அவர்களின் முயற்சியில் வெற்றி பெற்றார்களா ? இல்லையா ? என்பதுதான் ‘கோல்ட் கால்’ படத்தின் மீதி கதை.
கதையின் நாயகர்களாக நண்பர்களாக நடித்திருக்கும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய இளைஞர்களான அனைவரும் இளமை துள்ளும் துறு துறு நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர் .
நாயகிகளாக நடித்திருக்கும் அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி, கீர்த்தனா புல்கி கதைகேற்றபடி இயல்பான நடிப்பில் நடிக்கின்றனர் .
இசையமைப்பாளர் பிரணவ் கிரிதரனின் இசையும் , ஒளிப்பதிவாளர் சரவணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் .
ஒரு நிறுவனத்தில் விற்பனையாளர்களாக பணிபுரியும் நான்கு நண்பர்களை மையப்படுத்திய கதையுடன் நான்கு பேரின் வாழ்வியலை இயல்பாக சொல்வதுடன் நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும் விதத்தில் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் தம்பிதுரை
மொத்தத்தில் - ‘கோல்ட் கால்’ இளைஞர்களின் இனிமையான பயணம்
ரேட்டிங் - 3 / 5





Comments